இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,27,952 பேர் (நேற்றைய பாதிப்பு 1,49,394) கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். பாசிட்டிவிட்டி 7.9% ஆகக் சரிந்துள்ளது ஆறுதல் அளிப்பதாக உள்ளது.
நாட்டில் தினசரி கரோனா பாசிட்டிவிட்டி 7.98% ஆகவும், வாராந்திர பாசிட்டிவிட்டி 11.21% ஆகவும் இருப்பது கவனிக்கத்தக்கது. கரோனாவில் குணமடைவோர் விகிதம் 95.64 % ஆக உள்ளது.
கடந்த 24 மணி நேர நிலவரம் தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் வருமாறு:
> கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர்: 1,27,952
> கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்தோர்: 2,30,814
> இதுவரை குணமடைந்தோர்: 4,02,47,902
> சிகிச்சையில் உள்ளோரின் எண்ணிக்கை: 13,31,648 (3.16%)
> தினசரி பாசிட்டிவிட்டி விகிதம் 7.9% என்றளவில் உள்ளது.
> கடந்த 24 மணிநேரத்தில் உயிரிழந்தோர்: 1,059
> கரோனா மொத்த உயிரிழப்புகள்: 501,114
> இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொண்டோரின் எண்ணிக்கை: 168.98 கோடி.
உலகம் முழுவதும் கரோனா தொற்றின் அடுத்தடுத்த அலைகளினால் ஒட்டுமொத்த பாதிப்பு அதிகரித்து வருகிறது. வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த கட்டுப்பாடுகளுடன் தடுப்பூசிகள் செலுத்தும் பணிகளை தீவிரப்படுத்தி வந்தாலும் உருமாற்றம் அடைந்து தொற்று பரவலால் பாதிப்பு, உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கரோனா வைரஸால் இறந்தவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்தை நேற்று கடந்தது குறிப்பிடத்தக்கது.