தமிழ் சினிமாவின் நட்சத்திர ஜோடிகளான
தனுஷ்
, ஐஸ்வர்யா ஜோடி இருவரும் கடந்த 18 வருடங்களுக்கு முன்பாக காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இவர்கள் இருவரும் திடீரென கடந்த மாதம் 17ஆம் தேதி பிரிய போவதாக அறிவித்தனர். இவர்களின் இந்த முடிவு ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த கோலிவுட் வட்டாரத்திற்கு பேரதிர்ச்சியாக அமைந்தது.
விவாகரத்து தொடர்பாக இருவரும் தங்கள் சமூக வலைதள பக்கங்களில் தனித்தனியாக அறிக்கைகள் வெளியிட்டனர். அதில், நாங்கள் இருவரும் பிரிவதாக பரஸ்பரம் முடிவு செய்துள்ளோம். மேலும் இருவரும் எங்களை சிறப்பாக புரிந்து கொள்ள நேரம் ஒதுக்குகிறோம். தயவு செய்து எங்கள் முடிவை மதித்து, இதை சமாளிக்க தேவையான தனி மனித சுதந்திரத்தை எங்களுக்கு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம்’ என்று தெரிவித்திருந்தனர்.
இவர்கள் இருவரும் பிரிவிற்கான காரணம் என்ன என்பது குறித்து கோலிவுட் வட்டாரங்கள் பரபரப்பாக பேசி வருகின்றனர். ஆனாலும் தனுஷ், ஐஸ்வர்யா இருவரும் விவாகரத்து செய்யவில்லை. வழக்கமான குடும்ப தகராறுதான். அவர்கள் இருவருக்கும் அறிவுரை வழங்கியுள்ளதாக தனுஷின் தந்தை
கஸ்தூரி ராஜா
தெரிவித்திருந்தார்.
இதென்ன புது சோதனை..?: செம்ம கடுப்பில் தனுஷ் ரசிகர்கள்..!
தனுஷ், ஐஸ்வர்யா குடும்பத்தினர் இருவரையும் எப்படியாவது சேர்த்து வைத்துவிட வேண்டும் என்று முயற்சி செய்து வருகிறார்கள். ரஜினியின் வற்புறுத்தலை தொடர்ந்து ஐஸ்வர்யா கஸ்தூரி ராஜாவிடம் தனுஷுடன் மீண்டும் இணைவது பற்றி பேசியுள்ளார். அதனை தொடர்ந்து பிள்ளைகளுடன் இருவரையும் திருப்பதி கோயிலுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளார் கஸ்தூரி ராஜா.
இந்த விஷயம் தனுஷ் காதுக்கு எட்டவே கோபத்தின் உச்சிக்கே சென்றுள்ளார். யாரை கேட்டு இந்த முடிவை எடுத்தீங்க. மீண்டும் சேர்ந்து வாழ துளியும் விருப்பமில்லை. என்னை வற்புறுத்தாதீர்கள் என்று கண்டிப்புடன் கூறியுள்ளார் தனுஷ். இதனால் அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் குழப்பத்தில் உள்ளனாரம் இரு குடும்பத்தினரும்.
மீண்டும் தலைதூக்கும் உதயநிதி..! எந்த எந்த படங்கள் தெரியுமா?