நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் சென்னை வண்ணாரப்பேட்டையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “அ.தி.மு.க ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகள் மற்றும் செயல்படுத்தப்பட்ட திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். பொங்கல் தொகுப்பு என்ற பெயரில் குப்பையைத்தான் கொடுத்தனர்.
உள்ளாட்சியில் மகளிருக்கான 50 சதவிகித இட ஒதுக்கீடு திட்டத்தை மோசடி மூலம் தி.மு.க தனது திட்டம் எனக் கூறிவருகிறது. தொலைகாட்சியை ஆன் செய்தாலே ஆணழகன் ஸ்டாலின் தான் வந்தாரு… போனாரு… ரிப்பீட்டு! என்பது போல வருகிறார். 2006-ல் தி.மு.க காலத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் 87 வார்டில் கலவரம் நடந்தது. நீதிபதி வாக்கையே யாரோ செலுத்தி விட்டனர்.
பூத் ஏஜெண்ட்டுகள் நம்பிக்கையானவர்களாக இருக்க வேண்டும். தேர்தல் முடிவுகள் வெளியாகி மறைமுக தேர்தலுக்கு 10 நாள் இடைவெளி இருப்பதால் கொள்ளையடித்த பணத்தைப் பயன்படுத்தி தி.மு.க-வினர் கவுன்சிலர்களை விலைக்கு வாங்க முயல்வார்கள். கட்சியினர் விலை போனால் அது மன்னிக்க முடியாத குற்றம்” எனத் தெரிவித்தார்.
Also Read: “ராகுல் காந்தியை தமிழ்ச் சமூகம் மன்னிக்காது” – ஜெயக்குமார் காட்டம்!