புனிதமான தனது வீட்டில் சம்பந்தமில்லா ஜோடிகளை தங்க வைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக முன்னாள் எம்.பி. சசிகலா புஷ்பா மீது அவரது 2 வது கணவர் புகார் அளித்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளது.
சசிகலா புஷ்பாவின் இரண்டாவது கணவரும், வழக்கறிஞருமான ராமசாமி, சென்னை ஜெ.ஜெ.நகர் போலீசில் அளித்த புகாரில், வழக்கு ஒன்றிற்காக மதுரை சென்றுவிட்டு தனது 15 வயது மகளுடன் அண்ணா நகரில் உள்ள வீட்டுக்கு அதிகாலை 3 மணி அளவில் திரும்பியதாகவும், அப்போது புனிதமான தனது வீட்டில் இருந்து மது வாடை வீசியதோடு, அறைகுறை ஆடையுடன் ஆண் ஒருவரும், பெண் ஒருவரும் இருந்ததாகவும், அதனை வீடியோ எடுக்க முயன்றதால், தனது மனைவி சசிகலா புஷ்பா அவர்களுடன் சேர்ந்து தன்னை ஆபாசமாக திட்டி, தாக்கி யதோடு செல்போனை பறித்து அந்த காட்சிகளை அழித்து கொலை மிரட்டல் விடுத்ததாக புகாரில் குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து சசிகலா புஷ்பா மீதும், வீட்டின் படுக்கை அறையில் இருந்த ஜோடிகளான தஞ்சாவூர் ராஜா மற்றும் விழுப்புரம் அமுதா ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.