பள்ளத்தூர் பேரூராட்சி 8-வது வார்டில் அ.தி.மு.க. வேட்பாளர் போட்டியின்றி தேர்வு

சென்னை:

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந்தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் கடந்த 28-ந்தேதி தொடங்கி நேற்று நிறைவு பெற்றது.

சிவகங்கை மாவட்டம் பள்ளத்தூர் பேரூராட்சி 8-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு அ.தி.மு.க. வேட்பாளர் தெய்வானை என்பவர் வேட்புமனு தாக்கல் செய்து இருந்தார். இவரை எதிர்த்து யாருமே மனுதாக்கல் செய்யாததால் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். இது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு கிடைத்த முதல் வெற்றியாகும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.