உத்தர பிரதேசத்தில் வருகிற 10-ந்தேதி முதல் பல கட்டங்களாக தேர்தல் நடைபெற இருக்கிறது. முன்னணி தலைவர்கள் வீடு வீடாக சென்று பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்கள். பா.ஜனதா தலைவர்கள் மீண்டும் ஆட்சியை பிடிக்க தீவிரமாக பிரசாரம் செய்து வருகின்றனர்.
இன்று பா.ஜனதா மூத்த தலைவரும், பாதுகாப்புத்துறை அமைச்சருமான ராஜ்நாத் சிங் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, யோகி ஆதித்யநாத் மாநிலத்தின் பொருளாதாரத்தை 31 லட்சம் கோடி ரூபாய்க்கு எடுத்துச் சென்றுள்ளது. இது இந்தியாவின் 2-வது இடமாகும்.