அமெரிக்காவில்
நியூ யார்க்
நகரில் உள்ள மகாத்மா காந்தியின் வெண்கலச் சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு இந்திய தூதரகமும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
நியூ யார்க்கில் மான்ஹாட்டனில் உள்ள யூனியன் சதுக்கத்தில் மகாத்மா காந்தியின் 8 அடி உயர சிலை இருக்கிறது. இந்த சிலை நேற்று அடையாளம் தெரியாத நபர்களால் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
இவ்விவகாரம் தொடர்பாக அமெரிக்க அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளதாகவும், காந்தி சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளதற்கு கடும் கண்டங்களை தெரிவிப்பதாகவும் இந்திய தூதரகம் கூறியுள்ளது.
இந்திய எல்லையில் பாலம் கட்டும் சீனா.. மத்திய அரசு பரபரப்புத் தகவல்!
இதுகுறித்து நியூ யார்க்கில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள செய்தியில், இவ்விவகாரம் குறித்து அமெரிக்க அரசு துறை அதிகாரிகளிடம் தகவல் தெரிவிக்கப்பட்டு, உடனடியாக விசாரணை செய்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகாத்மா காந்தி சிலை சேதப்படுத்தப்பட்ட சம்பவம் நியூ யார்க்கில் உள்ள இந்திய அமெரிக்கர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காந்தியின் 117ஆவது பிறந்தநாளையொட்டி 1986ஆம் ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி சர்வதேச காந்தி நினைவு நிறுவனத்தால் இச்சிலை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.