நியூயார்க்:
அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு மெல்ல மெல்ல குறைந்து வந்த நிலையில், கடந்த ஆண்டு டிசம்பரில் உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் வைரஸ் அமெரிக்காவில் பரவிய பிறகு கொரோனா பாதிப்பு வெகுவாக உயரத் தொடங்கியது.
ஆயிரக்கணக்கில் இருந்த தினசரி பாதிப்பு திடீரென்று லட்சக்கணக்காக அதிகரித்தது. சில நாட்களுக்கு முன்பு ஒரே நாளில் 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றுக்கும் உள்ளானார்கள்.
இந்நிலையில், அமெரிக்காவில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கையில் 9 லட்சத்தைக் கடந்துள்ளது. கடந்த இரு மாத காலத்தில் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர்.
அங்கு கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 4.75 கோடியைத் தாண்டியுள்ளது.
கடந்த மாதம் ஒரே நாளில் 11 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா தொற்றுக்கு பாதிப்புக்கு ஆளாகினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.