அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாகாணத்தில் கடற்கரை பரப்பில் அமைதியாக ஓய்வு எடுத்த அரிய வகை ஆக்டோபசின் வீடியோ வெளியாகி உள்ளது.
Heather Leon என்பவர் தனது தாயுடன் Myrtle கடற்கரைப்பகுதியில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது ஆழமற்ற நீரில் ஆக்டோபஸ் ஒன்று ஓய்வு எடுப்பதைக் கண்டார்.
உடனடியாக அதனை வீடியோவில் பதிவு செய்த அவர் முகநூலில் பதிவிட்டுள்ளார். பின்னர் அந்த ஆக்டோபஸ் தண்ணீரில் நீந்தியபடி அங்கிருந்து செல்வதையும் அவர் படம்பிடித்து வெளியிட்டுள்ளார்.