இஸ்லாமாபாத்:காஷ்மீர் எல்லையில் போர் நிறுத்தம் தொடர்பாக இந்திய ராணுவ தலைமை தளபதி திசை திருப்பும் வகையில் பேசியுள்ளதாக பாக்., தெரிவித்துள்ளது. கடந்த, 2021 பிப்.,ல் காஷ்மீர் அருகே எல்லை கட்டுப்பாடு கோட்டில் போர் நிறுத்தம் செய்வது தொடர்பாக இந்தியா – பாக்., இடையே ஒப்பந்தம் ஏற்பட்டது.இது குறித்து ராணுவ தலைமை தளபதி எம்.எம்.நரவானே கூறும்போது, ”இந்தியா வலிமையாக உள்ள காரணத்தால் நம் கொள்கைப்படி போர் நிறுத்தப் பேச்சு நடத்தப்பட்டு வெற்றிகரமாக அமலில் உள்ளது,” என்றார். இதை மறுத்து பாக்., ராணுவ மேஜர் ஜெனரல் பாபர் இப்திகர் கூறியதாவது:போர் நிறுத்தப் பேச்சு குறித்து நரவானே திசை திருப்பும் வகையில் பேசியுள்ளார். எல்லை கட்டுப்பாடு கோட்டின் இருபுறத்தில் வசிக்கும் காஷ்மீர் மக்களின் பாதுகாப்பு கருதியே போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு பாக்., ஒப்புக் கொண்டது. இதில், எந்த தரப்பும் தனக்கு வலிமை உள்ளது என்றோ அல்லது எதிர் தரப்பு பலவீனமாக உள்ளது என்றோ கருதுவது தவறாகும்.இவ்வாறு அவர் கூறினார்.
இஸ்லாமாபாத்:காஷ்மீர் எல்லையில் போர் நிறுத்தம் தொடர்பாக இந்திய ராணுவ தலைமை தளபதி திசை திருப்பும் வகையில் பேசியுள்ளதாக பாக்., தெரிவித்துள்ளது.கடந்த, 2021 பிப்.,ல் காஷ்மீர் அருகே எல்லை
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.