ராய்பூர்:
மத்திய அரசு நாட்டை இரண்டாகப் பிரிப்பதாகவும், கோடீஸ்வரர்களுக்காக ஒன்று, கோடிக்கணக்கான சாமானியர்களுக்காக மற்றொன்று என இரண்டு இந்தியா இருப்பதாகவும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி அண்மையில் குற்றம் சாட்டியிருந்தார்.
ராகுல் காந்தியின் கருத்தை காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்களில் ஒருவரும் தற்போதைய மத்திய விமானப் போக்குவரத்துறை அமைச்சருமான ஜோதிராதித்ய சிந்தியா, கடுமையாக சாடியுள்ளார்.
ராய்பூரில் உள்ள சுவாமி விவேகானந்தர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முந்தைய காங்கிரஸ் ஆட்சியின்போது வளர்ச்சி இல்லாமை, ஊழல் மற்றும் பொருளாதார முறைகேடு ஆகியவை இருந்தாகவும், நாட்டின் 2014 க்கு முந்தைய நிலைமையை ராகுல்காந்தி பேசியிருக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் மோடி தலைமையில் புதிய இந்தியா உருவாக்கப்பட்டு வருவதாகவும், அங்கு ஊழல் ஒழிக்கப்பட்டு, வளர்ச்சி மற்றும் வளர்ச்சிக்கான கதவுகள் திறக்க ப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இப்போது இந்தியா உலக அரங்கில் வளர்ந்து வருகிறது. ஏழைகளுக்கு அவர்களின் உரிமைகள் மட்டுமல்ல, வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தின் புதிய பரிமாணங்கள் கிடைக்கின்றன. இவ்வாறு மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா கூறியுள்ளார்.