உயர் இரத்த சர்க்கரை அல்லது ஹைப்பர் கிளைசீமியா என்பது இரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவு ஆபத்தான நிலைக்கு அதிகரிக்கும் ஒரு நிலை.
இது பொதுவாக உடலில் இன்சுலின் குறைவாக இருக்கும்போது அல்லது உடலால் இன்சுலினை சரியாகப் பயன்படுத்த முடியாதபோது நிகழ்கிறது.
இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு டெசிலிட்டருக்கு 180 முதல் 200 மில்லிகிராம்களுக்கு மேல் செல்கிறது (எம்ஜி/டிஎல்). இப்படி இது அதிகரிக்கும் போது உயிருக்கே உலை வைத்து விடுகின்றது.
எனவே இவற்றின் அறிகுறிகள் என்னென்ன என்பதை தெரிந்து கொண்டு இதிலிருந்து விடுதலை பெற முயற்சி செய்ய வேண்டும். தற்போது அந்த அறிகுறிகள் என்ன? இவற்றை எப்படி தடுக்கலாம் என்பதை பற்றி பார்பபோம்.
சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால் என்ன நடக்கும்?
இரத்த சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால் வாந்தி, அதிக பசி மற்றும் தாகம், விரைவான இதயத் துடிப்பு, பார்வைக் கோளாறுகள் மற்றும் பிற அறிகுறிகளுக்கு வழிவகுக்கிறது.
சில பொதுவான அறிகுறிகள் பின்வருமாறு:
- அடிக்கடி சிறுநீர் கழித்தல்
- அதிகரித்த தாகம்
- மங்கலான பார்வை
- சோர்வு
- தலைவலி
சர்க்கரை அளவை இயல்பு நிலைக்கு கொண்டு வருவது எப்படி?
- உங்கள் இரத்த சர்க்கரை அளவை இயல்பு நிலைக்கு கொண்டு வர எளிதான வழி நிறைய தண்ணீர் குடிப்பதாகும்.
- உங்கள் தினசரி நீர் உட்கொள்ளும் அளவு சாதாரணமாக இருந்தால், உங்கள் இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்கும். உடலில் இருந்து நச்சுகள் மற்றும் இன்சுலினை வெளியேற்ற சிறுநீரகங்களுக்கு தண்ணீர் உதவுகிறது.
- நீரிழிவு நோயாளிகள் உங்கள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த 2-3 லிட்டர் தண்ணீரைக் குடிப்பது அவசியம்.
முக்கியமாக செய்ய வேண்டியது என்ன?
25 கிராம் குளுக்கோஸ் மாவு, சாக்லேட், மிட்டாய் போன்றவற்றில் ஏதாவது ஒன்றை எப்போதும் கைவசம் வைத்திருக்க வேண்டும். குளுக்ககான் ஊசியைக் கைவசம் வைத்துக்கொள்வதும் நல்லதுதான்.