எஸ்பிஐ நிகரலாபம் ரூ.8432 கோடி.. தனியார் நிறுவனங்களுக்கு டஃப் கொடுக்கும் PSU..!

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ அதன் காலாண்டு முடிவினை வெளியிட்டுள்ளது. அதன் படி நிகரலாபம் 62% அதிகரித்து, 8432 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

இதே கடந்த ஆண்டின் இதே காலாண்டில் 5196 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இவ்வங்கியானது ஒரு காலாண்டில் அதிகளவிலான லாபத்தினை பதிவு செய்துள்ளது.

வருவாய்

மொத்த வருவாய் விகிதமானது 78,352 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் 75,981 கோடி ரூபாயாக இருந்தது.

இதே எஸ்பிஐ குழுமத்தின் நிகர லாபம் 51% அதிகரித்து, 9692 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டில் 6402 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

வாரக்கடன்

வாரக்கடன்

இவ்வங்கியின் மொத்த செயல்படாத சொத்துகளின் மதிப்பானது 4.5% ஆக குறைந்துள்ளது. இது கடந்த ஆண்டில் 4.77% ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதே நிகரலாபம் 1.34% ஆக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டில் 1.23% ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

பணப் பரிமாற்ற விதிகள்
 

பணப் பரிமாற்ற விதிகள்

பிப்ரவரி 1, 2022 முதல் சில பணப் பரிமாற்ற விதிகளை எஸ்பிஐ மாற்றியுள்ளது. இது ஐஎம்பிஎஸ் முறையில் பரிவர்த்தனை செய்யக்கூடிய பணத்தின் அளவை 2 லட்சத்தில் இருந்து, 5 லட்சம் ரூபாயாக உயர்த்தியுள்ளது. இதற்கு கட்டணம் 20+ ஜிஎஸ்டி கட்டணமும் உண்டு. அதேபோல ஐஎம்பிஎஸ் 2 லட்சம் ரூபாய்க்கு குறைவான பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் கிடையாது.

மிகப்பெரிய பொதுத்துறை  வங்கி

மிகப்பெரிய பொதுத்துறை வங்கி

எஸ்பிஐ நான்கில் ஒரு பங்கு சந்தைப் பங்கைப் கொண்ட நாட்டின் மிகப்பெரிய வங்கியாகும். எஸ்பிஐ அதன் 11 துணை நிறுவனங்களின் மூலம் வணிகங்களை வெற்றிகரமாக பல்வகைப்படுத்தப்பட்டுள்ளது. எஸ்பிஐ ஜெனரல் இன்சூரன்ஸ், எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ், எஸ்பிஐ மியூச்சுவல் ஃபண்ட், எஸ்பிஐ கார்டு போன்றவை. இது உலகளவில் தனது இருப்பை பரப்பி, 32 நாடுகளில் உள்ள 233 அலுவலகங்கள் செயல்படுகின்றது.

பங்கு விலை நிலவரம்

பங்கு விலை நிலவரம்

எஸ்பிஐ-யின் பங்கு விலையானது என்.எஸ்.இ-யில் 1.81% குறைந்து, 530.30 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இதன் 52 வார உச்ச விலையானது 546.40 ரூபாயாகும். 52 வார குறைந்தபட்ச விலையானது 248.25 ரூபாயாகும்.

பி.எஸ்.பி-யில் 1.81% குறைந்து, 530.30 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இதன் 52 வார உச்ச விலையானது 546.40 ரூபாயாகும். 52 வார குறைந்தபட்ச விலையானது 248.25 ரூபாயாகும்.

SBI reported net profit 62% to Rs.8432 crore/எஸ்பிஐ நிகரலாபம் ரூ.8432 கோடி.. தனியார் நிறுவனங்களுக்கு டஃப் கொடுக்கும் PSU..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

SBI reported net profit 62% to Rs.8432 crore

SBI reported net profit 62% to Rs.8432 crore/எஸ்பிஐ நிகரலாபம் ரூ.8432 கோடி.. தனியார் நிறுவனங்களுக்கு டஃப் கொடுக்கும் PSU..!

Story first published: Saturday, February 5, 2022, 22:56 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.