சீனாவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.6 ஆகப் பதிவானது.
இதுகுறித்து அமெரிக்க புவியியல் மையம் தரப்பில், “சீனாவின் குவிங்ஹாய் மாகாணத்தில் சனிக்கிழமை அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ஸின்யிங் நகரிலிருந்து 140 கிலோ மீட்டர் தொலைவில் ஏற்பட்டுள்ளது. இதன் ஆழம் 10 கி.மீ. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.6 ஆகப் பதிவானது” என்று தெரிவிக்கப்பட்டது.
நிலநடுக்கம் காரணமாகக் கட்டிடங்கள் குலுங்கியதாகவும், உயிரிழப்பு ஏற்படவில்லை என்றும் சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நில நடுக்கத்தால் வீடுகள் குலுங்கும் காட்சியை நெட்டிசன்கள் பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.
EARTHQUAKE RUMBLES: A 6.9-magnitude earthquake rocked Menyuan County in northwest China’s Qinghai Province on Saturday, according to the china Earthquake Networks Center. pic.twitter.com/CuHjZjgjal
— CBS News (@CBSNews) January 8, 2022
சீனாவின் மலைப் பகுதிகளான மேற்கு மற்றும் தென்மேற்குப் பகுதிகள் தொடர்ந்து நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. 2008ஆம் ஆண்டு சிச்சுவான் மாகாணத்தில் 7.9 அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் காரணமாக சுமார் 87,000 பேர் பலியாகினர் என்பது நினைவுகூரத்தக்கது.