சென்னை: சட்டவிரோதமாக தற்காலிகமாக நியமிக்கப்பட்ட ஊழியர்கள் பணியில் நீடிப்பதை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. தமிழக அரசு சட்டத்திற்குட்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம் வந்துள்ளது என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர். பதவி உயர்வு, ஊதிய நிலுவை கோரி ஓய்வுபெற்ற தமிழாசிரியர் கண்ணம்மாள் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இளநிலை உதவியாளராக கண்ணம்மாள் பணியாற்றியபோது பணி வரன்முறைப்படுத்தப்படவில்லை எனவும் தவறுதலாக அவரது பெயர் தமிழ் ஆசிரியர் பட்டியலில் சேர்க்கப்பட்டதால் ஊதிய உயர்வுக்கு தகுதி பெறவில்லை எனவும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.