சீன பெருஞ்சுவரில் ஒலிம்பிக் சுடர் ஏந்தி ஓடிய ஜாக்கிசான்
சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நேற்று தொடங்கியது. இந்த போட்டிகள் வருகிற 20ம்தேதி வரை நடக்கிறது. இதற்கான ஒலிம்பிக் தீப தொடர் ஓட்டம் பெய்ஜிங்கில் நேற்று முன்தினம் தொடங்கியது.
புகழ்பெற்ற சீன அரண்மனை, சீனப் பெருஞ்சுவர் உள்ளிட்ட சீனாவின் முக்கிய அடையாளங்களைக் கடந்து இந்த தீபம் கொண்டு செல்லப்பட்டது. ஒலிம்பிக் தீப தொடர் ஓட்டத்தின் இரண்டாம் நாளான நேற்று நடிகர் ஜாக்கிசான் ஒலிம்பிக் தீபத்தை கையில் ஏந்தி சீனப் பெருஞ்சுவரில் தீப தொடர் ஓட்டத்தை தொடர்ந்தார். அவருடன் விளையாட்டு வீரர்களும், பொதுமக்களும் ஓடினார்கள்.
67 வயதான ஜாக்கிசான் அதிகாலை 4 மணி முதல் இந்த ஓட்டத்தில் அவர் கலந்து கொண்டார். ஓட்டம் சீன பெருஞ்சுவரில் தொடங்கியதில் இருந்து முடியும் வரை ஓடினார். ஜாக்கி சான் இதற்கு முன் 3 ஒலிம்பிக் தீப ஓட்டங்களில் கலந்து கொண்டிருக்கிறார்.