இந்தியாவின் முன்னணி வணிக குழுமங்களில் ஒன்றான டாடா குழுமமத்தினை சேர்ந்த, முன்னணி வாகன நிறுவனங்களில் ஒன்று டாடா மோட்டார்ஸ்.
இந்த நிறுவனம் ஜனவரி மாதத்தில் மிகப்பெரிய அளவில் வாகன விற்பனையை செய்துள்ளது. இது வரவிருக்கும் மாதங்களிலும் வாகன விற்பனையை ஊக்குவிக்க பல்வேறு திட்டங்களை கையாண்டு வருகின்றது டாடா மோட்டார்ஸ் நிறுவனம்.
முதல் கட்டமாக மற்ற வாகன நிறுவனங்கள் விலையை அதிகரித்துக் கொண்டுள்ள நிலையில் வாகனங்களின் விலையில் சலுகையினை அறிவித்துள்ளது டாடா மோட்டார்ஸ்.
டாடாவுக்கு ஏற்பட்ட பலத்த நஷ்டம்.. 3வது காலாண்டிலும் கைவிட்ட டாடா மோட்டார்ஸ்.. ஏன்?
ரூ.60,000 வரையில் சலுகை
வாகன உற்பத்தி நிறுவனங்கள் மூலதன பொருட்கள் பற்றாக்குறையின் மத்தியில், உற்பத்தி விலையும் அதிகரித்துள்ளது. இதற்கும் மத்தியில் வாகன நிறுவனங்கள் விலையில் 60,000 ரூபாய் வரையில் சலுகையை அறிவித்துள்ளது. இந்த தள்ளுபடி என்பது ஒவ்வொரு ரக வாகனங்களுக்கும் ஏற்ப விலையில் குறைக்க திட்டமிட்டுள்ளது.
டாடா சாஃபாரி
எஸ்யுவி ரக காரான டாடா சாஃபாரி வாடிக்கையாளர்களுக்கு பிடித்தமான கார்களில் ஒன்றாக உள்ளது. இது டாடா ஹாரியரைப் போல டீசல் வாகனம் ஆகும். இது மேனுவல் அல்லது ஆட்டோ கியரிங் ஆப்சன் உண்டு. வாடிக்கையாளார்கள் எது வேண்டுமோ அதனை வாங்கிக் கொள்ளலாம். கடந்த ஆண்டு விற்பனையாகாத 2021 மாடல் சாஃபாரி வாகனங்களுக்கு, எக்ஸ் சேன்ஜ்களுக்கு 60,000 ரூபாய் வரையில் சலுகை கிடைக்கும். இதே புதிய மாடல் 2022 வாகனங்களுக்கு 40,000 ரூபாய் வரையில் சலுகை கிடைக்கும் என டாடா நிறுவமம் அறிவித்துள்ளது.
டாடா ஹாரியர்
டாடா ஹாரியர் ரக வாகனம் நடுத்தர ரக எஸ்யுவி வாகனமாகும். இது வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற வசதியான ஒரு வாகனமாகவும் உள்ளது. இந்த நடுத்தர வாகனங்களிலும் விற்பனையாகாத 2021 ரக கார்களுக்கு 60,000 ரூபாய் வரையில் சலுகை கிடைக்கிறது. இதே 2022 மாடல்களுக்கு 25,000 ரூபாய் வரையில் பலன்கள் உண்டு.
டாடா டியாகோ (ரூ.30,000 வரையில்)
டாடா டியாகோவின் ஹேட்ஸ்பேக் கார் சந்தையில் மிகச் சிறந்த ட்ஹேவையாக உள்ளது. இது சிறந்த மாடல், வசதிகளுடன் சரியான பட்ஜெட்டில் கிடைப்பதால் வாடிக்கையாளர்களிடம் அதிக வரவேற்பினை பெற்றுள்ளது. டியாகோ ஃபேஸ்லிஃப்ட் மாடலில் புதிய பம்பர் அமைப்பு, ஹெட்லைட்டுகள் மற்றும் புதிய க்ரில் அமைப்பு இடம்பெற்றுள்ளது. இதில் மாடலை பொறுத்து 20,000 ரூபாயினை சலுகைகள் கிடைக்கும். இதே சமீபத்தில் அறிவிக்கப்பட்ட CNG வெர்சன் 10,000 ரூபாய் சலுகை வரை கிடைக்கும். இதே கார்ப்பரேட் பையர்களுக்கு 5000 ரூபாய் வரையில் தள்ளுபடி கிடைக்கும்.
டாடா டிகோர் (ரூ.25000 வரையில்)
டாடா டிகோர் வாகனம் பல ரகங்களில் கிடைக்கிறது. இது காம்பாக்ட் ரக காராக உள்ளது. சந்தையில் மிக சிறந்த மாடலாக உள்ளது. இது முதல் முறையாக கார் வாங்க திட்டவோருக்கு சிறந்த தேர்வாக அமையலாம். தற்போது சிஎன்ஜி வகை கார்கள் தவிர, 25,000 ரூபாய் வரையில் தள்ளுபடி கிடைக்கும்.
டாடா நெக்ஸான் (ரூ.15000 வரையில்)
டாடா நெக்ஸான் டாடாவின் பிரபலமான கார்களில் ஒன்று. இது அதன் பிரபலமான தோற்றத்திற்காக அறியப்பட்ட ஒரு வாகனமாகும். இதில் டீசல் எஞ்சின் வகைகளுக்கு 15000 ரூபாய் வரையிலான எக்ஸ்சேஞ்ச் சலுகை கிடைக்கிறது. இதே கார்ப்பரேட் வாடிக்கையாளர்களுக்கு 10,000 ரூபாய் வரையில் சலுகை கிடைக்கிறது.
டாடா அல்ட்ராஸ்
டாடா அல்ட்ராஸ் இந்தியாவின் பிரீமியம் ஹேட்ச்பேக் கார் மார்கெட்டில் மிகச் சிறந்த தேர்வாக உள்ளது. அதிக பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த ஒரு காராகும். டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அல்ஃபா என்ற புதிய கட்டமைப்பு கொள்கையில் இந்த கார் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த காருக்கும் 10,000 ரூபாய் வரையில் சலுகை கிடைக்கும்.
டாடா மோட்டார்ஸ் பங்கு விலை
இந்த நிறுவனத்தின் பங்கு விலையானது கடந்த அமெர்வில் 0.77% குறைந்து, 500.60 ரூபாயாக என்.எஸ்.இ-யில் முடிவடைந்துள்ளது. இதன் உச்ச விலை 507.80 ரூபாயாகும். இதன் குறைந்தபட்ச விலை 499 ரூபாயாகும்.
இதே பி.எஸ்.இ-யில் 0.80% குறைந்து, 500.55 ரூபாயாக குறைந்துள்ளது. இதன் இதன் உச்ச விலை 507.85 ரூபாயாகும். இதன் குறைந்தபட்ச விலை 499 ரூபாயாகும்.இதன் 52 வார அதிகபட்ச விலை 536.50 ரூபாயாகும். 52 வார குறைந்தபட்ச விலை 156.55 ரூபாயாகும்.
Tata motors offering discounts of up to Rs.60,000 on safari, Harrier and more cars
Tata motors offering discounts of up to Rs.60,000 on safari, Harrier and more cars/டாடா மோட்டார்ஸ் கொடுத்த ஆஃபர்.. கார் பிரியர்களுக்கு சூப்பர் சான்ஸ்.. இது ஷேர் விலையில்?