டெல்லி: காஷ்மீர், டெல்லி பகுதிகளில் இன்று கடும் நில அதிர்வு ஏற்பட்டது. எனினும், இந்த நில அதிர்வால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
இது குறித்து தேசிய புவியியல் ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில், “ஆப்கானிஸ்தான் – தஜிகிஸ்தான் எல்லையை ஒட்டிய பகுதிகளில் இன்று (சனிக்கிழமை) காலை 9.45 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.7 ஆக பதிவாகியது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தின் தாக்கமாக காஷ்மீர், டெல்லி பகுதிகளில் கடும் நில அதிர்வுகள் உணரப்பட்டன.
ஷாஸ்ஷான்ங் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “எனது தலை சுழல்கிறது என்று நினைத்து கண்களை மூட ஆரம்பித்தேன். திடீரென்று மின்விசிறியைப் பார்த்தபோது அது நில அதிர்வு என்பதை உணர்ந்தேன். நொய்டாவில் 25-30 வினாடிகளுக்கு கடுமையான நில அதிர்வு உணரப்பட்டது” என்று பதிவிட்டுள்ளார்.
எனினும், இந்த நில அதிர்வால் எந்த சேதமும் ஏற்படவில்லை.