தமிழகத்தில் கடந்த டிசம்பர் மாதம் முதல் கொரோனாவின் மூன்றாவது அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து, தமிழக அரசு தொடர்ந்து பல்வேறு கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டது.
குறிப்பாக இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு மற்றும் பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை என பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டது. வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டுத் தலங்களில் பொதுமக்கள் வழிபட தடை விதிக்கப்பட்டது. கட்டுப்பாடுகளின் விளைவாக கொரோனா தொற்று படிப்படியாக குறையத் தொடங்கியது.
இதனை தொடர்ந்து, ஊரடங்கு கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு மற்றும் இரவு நேர ஊரடங்கு ரத்து செய்யப்பட்டது. வார இறுதி நாட்களில் வழிபாடு தளங்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளும் விலக்கிக் கொள்ளப்பட்டது. மேலும், மாணவர்களுக்கு கடந்த 1ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு, நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இருந்த போதிலும் இன்னும் இரண்டு வாரங்களுக்கு பொது மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
ஆகையால், தேர்தலுக்குப் பின்னர் மீண்டும் ஊரடங்கு அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு தேர்தலுக்காக தமிழக அரசு ஊரடங்கை ரத்து செய்துள்ளது என பல்வேறு புகார்கள் வந்த வண்ணம் உள்ளனர். தற்போது தேர்தல் பொதுக்கூட்டங்கள், வாக்காளர்கள் வாக்கு சேகரிப்பு உள்ளிட்ட தேர்தல் பணிகளில் ஈடுபட உள்ளதால் கொரோனா தொற்று மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.