இந்தியாவினை பொறுத்த வரையில் முதலீட்டாளர்களை கவரும் வண்ணம் பல முதலீட்டு திட்டங்கள் உள்ளன. அவற்றில் மிக முக்கியமானது அஞ்சலகத்தின் பொது வருங்கால வைப்பு நிதி திட்டமும் ஒன்று.
ஏனெனில் பாதுகாப்பான, கணிசமான வருவாய் கொடுக்கும் ஒரு திட்டமாகவும் உள்ளது. எல்லாவற்றிற்கும் மேலாக முதலீட்டுக்கு எந்த பங்கமும் இல்லை.
அஞ்சலகத்தில் பல்வேறு திட்டங்கள் இருந்தாலும், அவர்களுக்கு மிக பாதுகாப்பான திட்டமாக பார்க்கப்படுவது அஞ்சலகத்தின் வருங்கால வைப்பு நிதி திட்டம் தான்.
ரூ.1 கோடி இலக்கு.. SIP-ல் எவ்வளவு முதலீடு.. எத்தனை ஆண்டுகள் செய்யணும்..!

பிபிஎஃப்
பிபிஎஃப் எனப்படும் பொது வருங்கால வைப்பு நிதி திட்டம் பாதுகாப்பாக, முதலீட்டுக்கு பங்கமில்லாத ஒரு திட்டத்தில் முதலீட்டு திட்டமாக உள்ளது. இது பாதுகாப்பாக முதலீடு செய்ய நினைப்போருக்கு, அரசின் பொது வருங்கால வைப்பு நிதி திட்டம் என்பது ஒரு சரியான திட்டம் தான். இந்த திட்டமானது 15 ஆண்டுகால திட்டமாகும்.

7.1% வட்டி + வரிச்சலுகை
இதில் வரிச்சலுகையும் உண்டு. இதற்கான வட்டி விகிதத்தினை அரசு சந்தை நிலவரத்திற்கு ஏற்ப, ஒவ்வொரு காலாண்டிலும் மாற்றியமைக்கிறது. தற்போது இந்த விகிதம் 7.1% ஆக உள்ளது.
அதெல்லாம் சரி இந்த திட்டத்தில் முதிர்வு காலத்தின் போது 20 லட்சம் ரூபாய் வேண்டும். ஆக இந்த திட்டத்தில் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும். மற்ற விவரங்கள் என்ன வாருங்கள் பார்க்கலாம்.

ரூ.20 லட்சம் எப்படி சாத்தியம்?
இந்த திட்டத்தில் 25 வயதான ஒருவர் இணைகிறார் என வைத்துக் கொள்வோம்.அவர் மாதம் 35000 ரூபாய் சம்பாதிக்கிறார் என வைத்துக் கொள்வோம். அவரின் முதலீட்டில் தினசரி 150 ரூபாய் செலவிடுவது என்பது பிரச்சனையாக இருக்காது. ஆக மொத்தம் மாதம் அவர் 4500 ரூபாய் முதலீடு செய்வார். இதன் மூலம் வருடத்திற்கு 54,000 ரூபாய் முதலீடு செய்வார்.

20 வருடம் முதலீடு
ஒருவர் 20 வருடம் முதலீடு செய்கிறார் என வைத்துக் கொள்வோம். மொத்தம் 10.80 லட்சம் ரூபாய் முதலீடு செய்திருப்பார். இதன் மூலம் முதிர்வு காலத்தில் 20 லட்சம் ரூபாய் முதிர்வு தொகையாக கிடைக்கும். இதில் கூடுதலாக வரிச்சலுகையும் கிடைப்பதால் இன்னும் சிறப்பானதொரு திட்டமாக பார்க்கப்படுகிறது.

ஏன் தொடரலாம்
இந்த திட்டத்தின் கால வரம்பு 15 வருடம் என்றாலும், இந்த திட்டத்தின் முதிர்வுக்கு பின்னரும் 5 வருட தொகுதிகளாக தொடரலாம் என்பதால், இது இன்னும் கூடுதல் நன்மையாக பார்க்கப்படுகிறது.
அரசின் இந்த பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் மாதம் குறைந்தபட்சம் 500 ரூபாய் முதலீடு செய்யலாம். அதிகபட்சமாக 1.5 லட்சம் ரூபாய் முதலீடு செய்து கொள்ளலாம்.

எப்படி இந்த கணக்கினை எப்படி தொடங்குவது?
அரசின் இந்த பொது வருங்கால வைப்பு நிதி கணக்கினை அஞ்சலகம், பொதுத்துறை வங்கிகள் மற்றும் சில முன்னணி தனியார் வங்கிகள் மூலமும் தொடங்கிக் கொள்ளலாம். ஒரு வேளை துரதிஷ்டவசமாக பிபிஎஃப் அக்கவுண்ட் ஹோல்டர் இறந்து விட்டால், அவரது மனைவியோ அல்லது சட்டபூர்வமாக யார் வாரிசுதாரரோ அவர்கள் க்ளைம் செய்து கொள்ளலாம். உங்களது பிபிஎஃப் கணக்கு தொடங்கி முதிர்வு அடைந்துவிட்டால், 15 வருடத்தின் நிதியாண்டின் முடிவில் க்ளைம் செய்து கொள்ளலாம்.

பணம் எடுக்கலாமா?
உங்களது கணக்கு தொடங்கப்பட்ட ஆண்டில் இருந்து 7வது நிதியாண்டில் உங்களது பிபிஎஃப் கணக்கில் இருந்து ஓரளவு தொகையினை பெறலாம். அவ்வாறு எடுக்கப்படும் தொகையானது ஒரு நிதியாண்டில் ஒரு முறை மட்டுமே எடுக்க அனுமதிக்கப்படுகிறது. அதுவும் நடப்பு ஆண்டின் முந்தைய ஆண்டின் நிலுவையில் 50% மட்டும் எடுக்க அனுமதிக்கப்படுகிறது. எனினும் இந்த திட்டத்தினை முழுமையாக தொடரும்போது மட்டுமே முழுபலனையும் பெற முடியும்.
PPF scheme: Will you get Rs 20 lakh maturity by investing Rs 150 daily?
PPF scheme: Will you get Rs 20 lakh maturity by investing Rs 150 daily?/தினசரி ரூ.150 போதும்.. ரூ.20 லட்சம் கேரண்டி.. அஞ்சலகத்தின் இந்த திட்டத்தை பாருங்க..!