Social Media Fake ID Complaint Update From VCK : விடுலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன் குறித்து சமூகவலைதளங்களில் போலி கணக்கு தொடங்கி அவதூறு கருத்துக்களை பரப்பி வருவோர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் அனைத்தும் தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகிறனர். மேலும் இந்த தேர்தலுக்காக அரசியல் தலைவர்கள் பலரும் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ள நிலையில், சிலர் நேரடியாக மக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுவரும் நிலையில், ஒருசிலர் சமூக வலைதளங்களில் வாயிலாக பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர்.
கட்சி தலைவர்கள் மட்டுமல்லாது தொண்டர்கள் ஆதரவாளர்கள் என பலரும் தங்களது கட்சிக்காக சமூக வலைதளங்களில் பிரச்சாரம் செய்து வருகினறனர். இந்த நிலையில், அரசியல் தலைவர்கள் பெயரில் போலி கணக்குகள் தொடங்குவது அதிகரித்து வருகிறது. இந்த போலி கணக்குகள் மூலம் போலி தகவல்கள் பரப்பப்பட்டு மக்கள் ஏமாறும் நிலை ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் பெயரில் போலி சமூகவலைதள கணக்கு தொடங்கப்பட்டு அவதூறு கருத்துக்களை பரப்பி வருகிறார்கள் என்றும், இந்த செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப்பொதுச்செயலாளரும், திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்எஸ் பாலாஜி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், கூறுகையில்,
சமூகவலைதளங்களில் விடுதலைசிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல் திருமாவளவன் பெயரில் போலி கணக்குகள் தொடங்கப்பட்டு அதில் தொடர்ச்சியாக அவதூறு பரப்பும் வகையில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். நகர்புற உள்ளாட்சி தேர்தல் நெருங்கி வரும் இந்நேரத்தில் திருமாவளவன் பெயருக்கு கலங்கம் விளைவிக்கும் நோக்கில், அரசியல் ஆதாயத்திற்காக சமூகவலைதளங்களில் அவதூறு பரப்பம் வகையில், கருத்து பதிவிட்டு செயல்படும் நபர்கள் மீதும், இந்த கருத்துக்களை வாஸ்ட்அப் உள்ளிட்ட செயலிகளில் பரிமாற்றம் செய்பவர்கள் மீதும், உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி ஆதாராத்துடன் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருப்பதாக கூறியுள்ளார்.