பெங்களூரு-”பிரதமர் நரேந்திர மோடியின் கனவை நனவாக்கும் வகையில் கர்நாடகாவில் கோவில்களை மேம்படுத்துவதற்காக, ‘தெய்வ சங்கல்பம்’ என்ற பெயரில் புதிய திட்டம் ஆரம்பிக்கப்படும்.
முதல் கட்டமாக 25 கோவில்கள் தேர்வு செய்யப்பட்டு, அவற்றை மேம்படுத்த ‘மாஸ்டர் பிளான்’ வகுக்கப்பட்டுள்ளது,” என ஹிந்து அறநிலைய துறை அமைச்சர் சசிகலா ஜொல்லே தெரிவித்தார்.ஹிந்து அறநிலைய துறை அமைச்சர் சசிகலா ஜொல்லே, பெங்களூரு விகாஸ் சவுதாவில் உயர் அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார்.கூட்டத்துக்கு பின் அவர் கூறியதாவது:கர்நாடகாவில் அதிக பக்தர்கள் தரிசனத்துக்கு செல்லும் கோவில்களை மேம்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. முதல் கட்டமாக, 25 கோவில்கள் தேர்வு செய்யப்பட்டு, அவற்றை மேம்படுத்த ‘மாஸ்டர் பிளான்’ வகுக்கப்பட்டுள்ளது.இத்திட்டத்தின் படி கோவில்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், குப்பை நிர்வகிப்பு, பக்தர்களுக்கு தேவையான வசதிகள் செய்யப்படும்.பக்தர்கள் காணிக்கைபக்தர்கள் அளிக்கும் காணிக்கை, பாரபட்சமின்றி நல்ல முறையில் பயன்படுத்தப்படும். இதற்காக 1,140 கோடி ரூபாய் செலவாகும் என கணிக்கப்பட்டுஉள்ளது.கர்நாடகாவில் 34 ஆயிரத்து 217 ‘சி’ தர வரிசை கோவில்கள் உள்ளன. இதில் ஆண்டுதோறும் 1,000 கோவில்கள் மேம்படுத்தப்படும். இது தவிர மாவட்டந்தோறும் பிரசித்தி பெற்ற கோவில்கள் மேம்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.கடந்த முறை பட்ஜெட்டில் கோவில்களை மேம்படுத்த 119 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்தது. முதல்வர் பசவராஜ் பொம்மை, 168 கோடி ரூபாய் சிறப்பு நிதியும் வழங்கினார்.தங்கும் விடுதிகர்நாடக பக்தர்கள் அதிகம் செல்லும் ஆந்திராவின் ஸ்ரீசைலம் கோவில் வளாகத்தில், மாநில அரசு சார்பில் 85 கோடி ரூபாயில் தங்கும் விடுதி அமைக்கப்படும்.அரசு சார்பில், ‘கைலாச மானசரோவர்’ செல்லும் பக்தர்களுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது. அது போன்று, நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் உள்ள 12 ஜோதிர்லிங்கங்களை தரிசிக்க சிறப்பு நிதியுதவி வழங்கவுள்ளோம்.ஹிந்து அறநிலைய துறைக்கு சொந்தமான கோவில்களின் நிலங்களை ‘சர்வே’ செய்வது குறித்து வருவாய் துறை அமைச்சர் அசோக்கிடம் ஆலோசிக்கப்பட்டுள்ளது.
விரைவில், ‘ட்ரோன்’ எனப்படும் ஆளில்லா விமானம் மூலம் சர்வே நடத்தப்படும். வக்ப் வாரிய நிலமும் சர்வே நடத்தப்படும்.அயோத்தியில் வசதிஉ.பி.,யின் அயோத்தியில் கர்நாடக பக்தர்களுக்காக தங்கும் விடுதி அமைப்பது தொடர்பாக, உத்தர பிரதேச மாநில அரசுடன் பேசப்படுகிறது. பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்த பின், நேரில் சென்று இடம் தேர்வு செய்யப்படும்.பிரதமர் நரேந்திர மோடியின் கனவை நனவாக்கும் வகையில், கர்நாடகாவில் கோவில்களை மேம்படுத்துவதற்காக ‘தெய்வ சங்கல்பம்’ திட்டம் ஆரம்பிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement