நியூயார்க்,
அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் உள்ள மன்ஹட்டன் ஒற்றுமை சதுக்கத்தில் மகாத்மா காந்தியின் 8 அடி உயர முழு வெண்க சிலை உள்ளது. கடந்த 1986- ஆம் ஆண்டு காந்தியின் 117-வது பிறந்த தினத்தை முன்னிட்டு காந்தி நினைவு சர்வதேச அறக்கட்டளையால் இந்த சிலை வழங்கபட்டது.
மகாத்மா காந்தியின் இந்த சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்தியுள்ளனர். இந்த சம்பவத்துக்கு அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், அமெரிக்க அதிகாரிகள் கவனத்துக்கும் இந்த விவாகரத்தை எடுத்துச்சென்றுள்ளது.
சிலையை சேதப்படுத்திய நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அமெரிக்க வெளியுறவுத்துறையிடமும் இந்திய தூதரகம் இவ்விவகாரத்தை எடுத்துச்சென்றுள்ளது. மகாத்மா காந்தியின் சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளது அமெரிக்காவில் உள்ள இந்திய சமூகத்தினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.