ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் பனிப்பொழிவின் தீவிரம் அதிகரித்து வருவதற்கு மத்தியிலும் பனிப்பொழிவை ரசிக்க சுற்றுலாப்பயணிகள் ஆர்வமுடன் அங்கு படையெடுத்து வருகின்றனர்.
ஷிம்லாவில் இன்று வெப்பநிலை மிக மிக குறைந்து மைனஸ் 2 புள்ளி 1 டிகிரி செல்சியஸ் ஆக பதிவாகி உள்ளது. அந்நகரில் இந்த ஆண்டில் பதிவாகிய மிகக்குறைந்த பட்ச வெப்பநிலை இதுவாகும். இதே போல, Lahaul-spiti மாவட்டத்தில் உள்ள keylong பகுதியில் வெப்பநிலை மைனஸ் 12 புள்ளி 5 டிகிரி செல்சியஸ் ஆகவும், கின்னார் மாவட்டத்தில் உள்ள ஆப்பிள் தோட்டங்களுக்கு பெயர்பெற்ற கப்லா பகுதியில் மைனஸ் 7 டிகிரி செல்சியஸ் ஆகவும் பதிவாகி உள்ளது. Manali-யில் வெப்பநிலை மைனஸ் 4 புள்ளி 4 டிகிரி செல்சியஸ் ஆக உள்ளது.
இதனிடையே பிரபல சுற்றுலாத்தலமான kufri-யில் 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 60 சென்டி மீட்டர் அளவிற்கு பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.