பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை பேரூராட்சி வார்டு கவுன்சிலர் தேர்தலில் போட்டியிட, அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் தாக்கல் செய்த 113 வேட்பு மனுக்களும், ஏற்றுக் கொள்ளப்பட்டது.பரங்கிப்பேட்டை பேரூராட்சிக்கு வரும் 19ம் தேதி நடக்க உள்ள நகர்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட, ஆளுங்கட்சியான தி.மு.க., 16 வார்டுகள், அ.தி.மு.க., 17 வார்டுகள், பா.ம.க., 7 வார்டுகள், பா.ஜ., 11 வார்டுகள், எஸ்.டி.பி.ஐ., கட்சி 6 வார்டுகள், அ.ம.மு.க., 3 வார்டுகள், மா.கம்யூ., 2 வார்டுகளிலும், வி.சி., கட்சி ஒரு வார்டிலும், இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சி 3 வார்டுகளிலும், காங்., 1 மற்றும் சுயேச்சைகள் 46 பேர் உட்பட 113 பேர் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர்.வேட்பு மனுக்களின் பரிசீலனை நேற்று பரங்ககிப்பேட்டை பேரூராட்சி அலுவலகத்தில், செயல் அலுவலர் செல்லப்பிள்ளை தலைமையில், நடந்தது. தி.மு.க., அ.தி.மு.க., மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் 113 பேரின் வேட்புமனுக்களையும், தேர்தல் அதிகாரிகள் ஏற்றுக் கொண்டனர். இதனால், பரங்கிப்பேட்டை பேரூராட்சியில், தேர்தல் பணி சூடுபிடிக்க துவங்கியுள்ளது.
Advertisement