இம்பால்: மணிப்பூரைச் சேர்ந்த நடிகர் சோமேந்திர சிங் என்பவர், தனது ஆதரவாளர்களுடன் பாஜகவில் இணைந்தார். மணிப்பூரில் வரும் 27 மற்றும் மார்ச் 3ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் ஆளும் பாஜக கட்சியில், ‘கைகூ’ என்று அழைக்கப்படும் மணிப்பூரி திரைப்படத்தில் நடித்த நடிகர் ஆர்.கே.சோமேந்திர சிங் மற்றும் திரைத்துறையைச் சேர்ந்த சிலர் நேற்று அம்மாநில முதல்வர் பிரேன் சிங் முன்னிலையில் பாஜகவில இணைந்தனர். அப்போது மணிப்பூர் பாஜக பொறுப்பாளர் சம்பித் பத்ரா, மாநில பாஜக தலைவர் சாரதா தேவி உள்ளிட்டோர் உடனிருந்தனர். முன்னதாக மக்களவைத் தேர்தலுக்கு முன்பு, லோக் ஜனசக்தி கட்சியின் மணிப்பூர் பிரிவின் துணைத் தலைவராக சோமேந்திரா இருந்தார். தற்போது அவரது ஆதரவாளர்களுடன் பாஜகவில் சேர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.