ஐதராபாத்,
பிரதமர் மோடி இன்று தெலுங்கானா மாநிலம் வருகை தந்தார். ஐதராபாத் விமான நிலையம் வந்த பிரதமர் மோடியை வரவேற்க தெலங்கானா முதல் மந்திரி சந்திரசேகர் ராவ் வரவில்லை.
கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன், மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி, தெலங்கானா அமைச்சர் தலசானி ஸ்ரீனிவாஸ் யாதவ் உள்ளிட்டோர் பிரதமரை விமான நிலையத்தில் வரவேற்றனர். பிரதமர் மோடியை விமான நிலையத்துக்கு சென்று சந்திரசேகர் ராவ் வரவேற்காதது அரசியல் வட்டாரத்தில் விமர்சனங்களை கிளப்பியுள்ளது.
எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியும் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. இது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா வெளியிட்ட டுவிட் பதிவில், “ அரசியலமைப்பை மாற்றி எழுத முயலும் தெலுங்கானா முதல் மந்திரி கே.சந்திரசேகர் ராவின் நடவடிக்கையை ஏற்க முடியாது.
தெலங்கானா முதல்வர் பதவிப் பிரமாணத்தை மீறியிருப்பது கவலையளிக்கிறது” என்றார். பாஜகவும் தெலுங்கானா முதல் மந்திரியின் செயல் வெட்கக்கேடானது என விமர்சித்துள்ளது.