பேடிஎம் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி.. ரூ.779 கோடி நஷ்டம்.. அப்படின்னா பங்கு விலை என்னாவது?

கடந்த ஆண்டில் வரலாறு காணாத அளவு பொது பங்கு வெளியீடானது இருந்தது. குறிப்பாக பல ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் பங்கு வெளீயீடானது பெரியளவில் இருந்தது. இது சிறு முதலீட்டாளர்களுக்கு மிக நல்ல வாய்ப்பாகவும் பார்க்கப்பட்டது.

எனினும் கடந்த ஆண்டில் மறக்கமுடியாத பங்கு வெளியீடு எனில், அது பேடிஎம் வெளியீடாகத் தான் இருக்கும். ஏனெனில் பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்ட முதல் நாளே பலத்த அடியினை கொடுத்தது.

பின் டெக் நிதி நிறுவனமான ஒன்97 கம்யூனிகேஷன்ஸ் கடந்த ஆண்டில் பங்கு வெளியிடப்பட்ட நிறுவனங்களிலேயே மிகப்பெரிய அளவில் நிதியினை திரட்டியது.

முதல் நாளே நஷ்டம்

ஆனால் இந்த நிகவானது பெருமை ரொம்ப காலத்திற்கு நீடிக்கவில்லை எனலாம். ஏனெனில் பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்ட முதல் நாளே அதிருப்தியினை தான் ஏற்படுத்தியது. பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்ட முதல் நாளே 28% வீழ்ச்சி கண்டது. மொத்தத்தில் நல்ல லாபம் கொடுக்கலாம் என கனவுகளோடு வாங்கி வைத்த முதலீட்டாளர்களுக்கு, முதல் நாளே மிகப்பெரிய நஷ்டம் தான் காத்திருந்தது.

போட்ட பணமாவது கிடைக்குமா?

போட்ட பணமாவது கிடைக்குமா?

போனது போகட்டும் போட்ட முதலாவது கைக்கு வந்தால் போதும், வெளியேறி விடலாம் என்று காத்திருந்தவர்களுக்கு, இன்னும் பேரதிர்ச்சி தான் காத்திருந்தது. ஏனெனில் அடுத்தடுத்த வர்த்தக நாட்களில் இந்த பங்கின் விலையானது தொடர்ந்து சரிவினையே கண்டு வந்தது. மொத்தத்தில் பங்கு சந்தை முதலீட்டாளர்களுக்கு பெரும் நஷ்டமே இன்று வரையில் தொடர்ந்து வருகின்றது.

செல்லிங் ஆப்ஷன்
 

செல்லிங் ஆப்ஷன்

இதற்கிடையில் பல்வேறு ஆய்வுகளும் பேடிஎம் பங்கிற்கு செல்லிங் ஆப்சனை கணிப்பாக கொடுத்து வந்தன. இது இன்னும் இந்த பங்கின் விலை சரிய காரணமாக அமைந்தது. பேடிஎம்மில் போட்ட பணம் என்னவாகுமோ என்ற அச்சத்தின் மத்தியில், தற்போது இதிலிருந்து வெளியேறவும் முடியாமல், தைரியமாக ஹோல்டு செய்யவும் முடியாமல் முதலீட்டாளர்கள் பெரும் குழ்பத்திலேயே இருந்து வருகின்றனர்.

அடிக்கு மேல் அடி

அடிக்கு மேல் அடி

பங்கு சந்தையினை பொறுத்தவரையில் ஏற்ற இறக்கம் என்பது இயல்பான ஒரு விஷயமாக இருந்தாலும், பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்ட நாளில் இருந்தே ஒரு பங்கின் விலையானது, இந்த அளவு சரிவினைக் கண்டுள்ளது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில் பேடிஎம் எப்படியாவது இந்த அழுத்தத்தில் இருந்து மீண்டு வர வேண்டும் என தீவிர முயற்சியினை காட்டி வந்தாலும், பேடிஎம்மின் 3 முக்கிய அதிகாரிகள் சமீபத்தில் வெளியேற உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

நஷ்டத்திற்கு மேல் நஷ்டம்

நஷ்டத்திற்கு மேல் நஷ்டம்

இப்படி பல நெருக்கடிக்களுக்கும் மத்தியில் பேடிஎம் பங்கு விலையானது, தொடர்ந்து ஏற்றம் காணாவிட்டாலும் அழுத்தத்திலேயே இருந்து வருகின்றது. இந்த நிலையில் இந்த நிறுவனத்தின் டிசம்பர் காலாண்டு முடிவு வெளியாகியுள்ளது. இதில் இந்த நிறுவனத்தின் ஒருங்கினைந்த நஷ்டமாக 778.5 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே கடந்த செப்டம்பர் காலாண்டில் இந்த நிறுவனம் 481.70 கோடி ரூபாய் நஷ்டத்தினையே கண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இதே கடந்த ஆண்டில் இதே காலாண்டில் 535 கோடி ரூபாய் நஷ்டத்தினையும் கண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

வருவாய் அதிகம் தான்

வருவாய் அதிகம் தான்

நஷ்டம் கண்டிருந்தாலும் இந்த நிறுவனத்தின் வருவாய் ஆனது கடந்த ஆண்டினை காட்டிலும் 89% அதிகரித்து, 1456 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் 772 கோடி ரூபாயாக இருந்தது. எனினும் இது இன்னும் மதிப்பாய்வில் உள்ளது. வருவாய் விகிதம் அதிகமாக இருந்தபோதிலும், தொடர்ந்து நஷ்டத்தினையே கண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

என்ன காரணம்

என்ன காரணம்

கொரோனாவினால் பாதிக்கப்பட்டவணிகத்தினை மீட்டெடுக்க நிறுவனம் முயன்று வந்தாலும், வலுவான வளர்ச்சி விகிதமானது இருந்து வருவதாகவும் இந்த நிறுவனம் பங்கு சந்தைக்கு அளித்த அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும் குறைவான செயல்பாட்டு கட்டணங்கள், வியாபாரத்தினை ஊக்குவிக்கும் பொருட்டு அளிக்கப்படும் கேஷ் பேக் சலுகைகள், செலவினங்கள் என பலவும் நஷ்டத்திற்கு காரணமாக அமைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

வலுவான அடித்தளம்

வலுவான அடித்தளம்

ஒரு புறம் நஷ்டம் அதிகரித்து இருந்தாலும் மறுபுறம், வலுவான அடித்தளத்தினை உருவாக்கியுள்ளதாகவும், சராசரியான மாதாந்திர பரிவர்த்தனை செய்யும் பயனர்கள் (MTU) எண்ணிக்கையானது, மூன்றாவது காலாண்டில் 37% அதிகரித்து, 64.4 மில்லியனாக அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

அதேபோல பேடிஎம்மின் வாலட், பேடிஎம் பேமெண்ட்ஸ், யுபிஐ சேவைகள், வங்கி கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு சேவைகள் என பலவும் 123% வளர்ச்சி கண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

நம்பிக்கை

நம்பிக்கை

தொடர்ந்து நஷ்டத்தினையே கடந்த சில காலாண்டுகளாக கண்டு வந்தாலும், மறுபுறம் வணிகத்தினை தொடர்ந்து விரிவாக்கம் செய்து வருகின்றது. இது இந்த பங்கின் விலையானது அதிகரிக்க காரணமாக அமையுமா? பங்கின் விலை மீண்டும் எப்போது அதிகரிக்கும். முதலீட்டாளர்கள் எப்போது தங்களது இழப்பினை ஈடுகட்ட முடியும் என்ற பலத்த எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது.

பங்கு விலை நிலவரம்

பங்கு விலை நிலவரம்

கடந்த வெள்ளிக்கிழமையன்று இந்த பங்கின் விலையானது என்.எஸ்.இ-யில் 0.93% அதிகரித்து, 953.30 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இதன் உச்ச விலையானது 961.90 ரூபாயாகவும், இதன் குறைந்தபட்ச விலையானது 946.05 ரூபாயாகவும் முடிவடைந்துள்ளது.

இதே பி.எஸ்.இ-யில் 0.91% அதிகரித்து, 953.25 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இதன் உச்ச விலையானது 961.95 ரூபாயாகவும், இதன் குறைந்தபட்ச விலையானது 945.90 ரூபாயாகவும் முடிவடைந்துள்ளது. இதன் 52 வார உச்ச விலையானது வெளியீட்டு விலையானது 2150 ரூபாயாகவும், 52 வார குறைந்தபட்ச விலையானது 875.50 ரூபாயாகவும் உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

paytm reported net loss widens to Rs.779 crore

paytm reported net loss widens to Rs.779 crore/பேடிஎம் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி.. ரூ.779 கோடி நஷ்டம்.. அப்படின்னா பங்கு விலை என்னாவது?

Story first published: Saturday, February 5, 2022, 10:35 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.