சான் பிரான்சிஸ்கோ,
சமூக ஊடக நிறுவனமான பேஸ்புக், அடுத்தகட்டமாக மெய்நிகர் ஆன்லைன் உலகமான ‘மெட்டாவெர்ஸ்’ நோக்கி தன்னுடைய கவனத்தை செலுத்தி வருவதால், அதனை பிரதிபலிக்கும் வகையில், நிறுவனத்தின் பெயரை மெட்டா என சில மாதங்களுக்கௌ முன்பு மாற்றம் செய்தது.
இந்நிலையில் வியாழன் காலை மெட்டாவின் பங்குகள் 26 சதவிகிதம் சரிந்தன, இது இந்த நிறுவனம் இதுவரை கண்டிராத மிகப்பெரியது வீழ்ச்சியாகும். நிறுவனத்தின் வரலாற்றில் முதன்முறையாக கடந்த காலாண்டில் மெட்டாவின் பயனர் எண்ணிக்கை குறைந்ததைத் தொடர்ந்து, இந்த திடீர் வீழ்ச்சி நிறுவனத்தின் சந்தை மூலதனத்தில் இருந்து 200 பில்லியன் டாலர்களை இழக்க செய்தது.
மெட்டாவின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க்கின் தனிப்பட்ட சொத்து மதிப்பு $24 பில்லியன் ஆக குறைந்துள்ளது, மேலும் குறிப்பாக டிக்டொக் பயன்படுத்து நபர்களின் நேரம் மற்றும் கவனத்தை ஈர்க்க நிறுவனம் கடுமையான போட்டியை எதிர்கொள்கிறது என்ற உண்மை அவர் ஒப்புக்கொண்டார்.
மறுபுறம், அதிகரித்து வரும் செலவுகள் மற்றும் சப்ளை செயின் சீர்குலைவுகள் காரணமாக வரவு செலவுத் திட்டங்களை குறைக்கபடுள்ளன. இதுவரை ஒரே நேரத்தில் இவ்வளவு சவால்களை மெட்டா சந்தித்ததில்லை என்றும் அதனால் இந்த ஆண்டு வருவாயில் இருந்து $10 பில்லியன் குறையலாம் என கூறப்படுகிறது.
நிறுவனத்தின் அழைப்பின் போது ஜுக்கர்பெர்க்கிடம், மெட்டாவெர்ஸை உலகம் எப்போது பயன்படுத்த தொடங்கும் என்று கேட்கப்பட்டது, அதற்கு அவர் மெட்டாவேர்ஸின் சில கூறுகளான டிஜிட்டல் அவதாரங்கள் போன்றவை ஏற்கனவே இங்கே உள்ளன என்பதை வெளிப்படுத்தினார்.
விஆர் அல்லது ஏஆர் ஹெட்செட்டைப் பயன்படுத்தி மெட்டாவேர்ஸ் சிறப்பாகச் செயல்படும் என்றும் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற மெட்டாவின் பயன்பாடுகள் மூலம் டிஜிட்டல் சூழலை மக்கள் எளிதில் அணுக முடியும் என்று கூறினார்.
நான்காவது காலாண்டில் மொத்தம் 2.91 பில்லியன் மாதாந்திர பயனர்களை கொண்டுள்ளதாக பேஸ்புக் தெரிவித்துள்ளது. அதன் மிகவும் இலாபகரமான சந்தையான வட அமெரிக்காவில் செயலில் உள்ள பயனர்களின் எண்ணிக்கை 196 மில்லியனிலிருந்து 195 மில்லியனாகக் குறைந்துள்ளது.