புதுடில்லி: குடியரசு தின அணிவகுப்பில் சிறந்த வாகனத்துக்கான விருதை மத்திய கல்வி அமைச்சகம் பெற்றுள்ளது.
இதுகுறித்து மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியதாவது: நாட்டின் 73வது குடியரசு தினத்தை முன்னிட்டு கடந்த 26ம் தேதி டில்லியில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய அரசின் அனைத்து துறைகள் மற்றும் மாநிலங்கள் பங்கேற்றன. அணிவகுப்பில் பங்கேற்ற வாகனங்களில் சிறந்த வாகனத்துக்கான விருதை கல்வித் துறை பெற்றுள்ளது. வேத காலம் முதல் ‘டிஜிட்டல்’ காலம் வரை கல்வித்துறை வளர்ச்சியை சித்தரித்து இருந்த கல்வித்துறை அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் பங்கேற்ற மாணவ, மாணவியர் அனைவருக்கும் பாராட்டை தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
புதுடில்லி: குடியரசு தின அணிவகுப்பில் சிறந்த வாகனத்துக்கான விருதை மத்திய கல்வி அமைச்சகம் பெற்றுள்ளது.இதுகுறித்து மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியதாவது:
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.