பெங்களூரில் டுவிட்டர் மற்றும் டெலிகிராம் உள்ளிட்ட செயலிகளில் தனியாக குழு தொடங்கி, மனைவியரை மாற்றிக் கொள்ளும் வைப் ஸ்வாப்பிங் விபரீதத்தில் ஈடுபட்ட காதல் தம்பதியரை போலீசார் கைது செய்துள்ளனர். அற்ப ஆசைக்காக மனைவியை கடைபொருளாக்கிவர்கள் கூண்டோடு சிக்கிய பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு…
சில மாதங்களுக்கு முன்பு கேரள மா நிலம் கோட்டயம் சங்கனேச்சேரியை சேர்ந்த பெண் ஒருவர் வாட்ஸ் அப் மற்றும் சமூக வலைதள குழுக்கள் மூலமாக மனைவியரை மாற்றிக்கொள்ளும் குழுவுடன் தொடர்பில் உள்ள தனது கணவர் தன்னை தவறான செயல்களில் ஈடுபட வற்புறுத்துவதாக புகார் அளித்தார்.
அதன் பேரில் விசாரணையை முன்னெடுத்த போலீசார், கப்புள்ஸ் மீட் என்ற குழு மூலமாக புடவைகளை மாற்றுவது போல வெட்கமே இல்லாமல் தங்கள் மனைவியை தங்கள் குழுவில் உள்ளோருடன் மாற்றிக் கொண்ட விபரீத சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது, இந்த குழுவை சேர்ந்த 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்த நிலையில் இதே போன்றதொரு வில்லங்கமான சம்பவம் கர் நாடக மா நிலம் பெங்களூரிலும் நடந்து வந்தது அம்பலமாகி உள்ளது. ஒய்ப் ஸ்வாப்பிங் என்ற பெயரில் டுவிட்டர், டெலிகிராம், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களை பயன்படுத்தி வினய் என்பவர் பிரெத்யேக குழுக்களை தொடங்கி உள்ளார்.
அதில் யாரெல்லாம் தங்களை மனைவியரை பிறருக்கு விட்டுக் கொடுக்கின்றனரோ அவர்கள் அந்த குழுவில் உறுப்பினராக சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளனர். இந்த குழுவில் உறுப்பினராக சேரும் கணவன் தனது மனைவியின் புகைபடத்தை குழுவில் பதிவு செய்ய வேண்டும், விரும்பும் உறுப்பினருக்கு அவரது மனைவியை தங்களுக்குள் மாற்றிக் கொள்ள வேண்டும் என்று கடந்த சில மாதங்களாக இத்தகையை விபரீத செயலில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
அப்படி விட்டுக் கொடுக்கும் வில்லங்க எண்ணம் இல்லாதவர்கள் குழுவில் இருந்து நீக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.அவ்வாறு விலக்கப்பட்டவர்கள் கொடுத்த தகவலின் பேரில் இந்த சமாச்சாரம் போலீசாரின் காதுகளுக்கு எட்டி வைப் ஸ்வாப்பிங் வினய் சிக்கி உள்ளான்.
எலக்ட்ரானிக் கடை நடத்தி வரும் வினயும் அவனது மனைவியும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் , மேலை நாட்டு பாணியில் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையை வாழ ஆசைப்பட்ட அவர்கள் தாங்கள் கெட்டதோடு மட்டுமல்லாமல் தங்களின் வில்லங்க ஆசைகளை வைப் ஸ்வாப்பிங் சமூக வலைதள குழுக்கள் மூலம் நிறைவேற்றிவந்தது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இருவரையும் கைது செய்துள்ள போலீஸ் இந்த குழுவில் உள்ள தாராள பிரபுக்களின் பெயர் பட்டியலை வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.