சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கத்தில்
ரஜினிகாந்த்
நடிப்பில் உருவான படம் ‘
அண்ணாத்த
‘. இந்தப்படத்தில் ரஜினிகாந்திற்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். இவர்களுடன் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், ஜகபதி பாபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். கடந்த தீபாவளிக்கு வெளியான இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பினை பெற்றது.
பலவித நெகட்டிவ் விமர்சனங்களை தாண்டி ‘அண்ணாத்த’ படம் பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனையை படைத்தது. அதனை தொடர்ந்து அண்மையில் இயக்குனர் சிவா வீட்டிற்கே சர்ப்ரைஸ் விசிட் கொடுத்த ரஜினி, தங்க செயின் பரிசாக அளித்தார். அத்துடன் சிவாவுடன் 3 மணிநேரம் கலந்துரையாடிவிட்டு வீடு திரும்பினார்.
இந்நிலையில் ரஜினியின் மகள் ஐஸ்வர்யாவும் – தனுஷும் பிரியவுள்ளதாக அண்மையில் அறிவித்தனர். மகளின் விவாகரத்து முடிவை ரஜினி சிறிதும் விரும்பவில்லையாம். குழந்தைகளின் நலனுக்காக இருவரும் சேர்ந்து வாழ வேண்டும் என ஆர்டர் போட்டாதாகவும் தகவல்கள் வெளியானது. இதுமட்டுமல்லாமல் குடும்ப நண்பர்கள் மூலமாக
தனுஷ்
, ஐஸ்வர்யா இடையில் பேச்சுவார்த்தை நடத்தவும் ரஜினி முயற்சித்து வருவதாக தகவல்கள் வெளியாகின.
வெறித்தனம் கன்பார்ம்.. ‘பீஸ்ட்’ ரிலீஸ் தேதி குறிச்சாச்சு: கொண்டாட்டத்தில் விஜய் ரசிகர்கள்!
இந்நிலையில் குடும்ப பிரச்சனையால் மன வேதனையில் இருக்கும் ரஜினி, அதிலிருந்து வெளிவர தற்போது தனது அடுத்த படத்திற்கான இயக்குனரை தேர்வு செய்யும் பணியில் இறங்கியுள்ளாராம். ரஜினியின் அடுத்த படத்தின் இயக்குனர்கள் குறித்த பட்டியலில் கார்த்திக் சுப்புராஜ், நெல்சன், வெங்கட் பிரபு என பலரின் பெயர்கள் அடிபட்டது.
இந்நிலையில் பால்கி இயக்கத்தில் நடிக்க ரஜினி முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தனுஷ் – ஐஸ்வர்யா பிரிவால் ரஜினியை நினைத்து வருத்தப்பட்ட ரசிகர்களுக்கு இந்த தகவல் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பத்து தல Glimpse ஏன் இப்படி இருக்கு! படத்தில் நயன்தாரா வேடம்!