டாக்கா:
வங்காளதேசத்தில் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. கொமிலா விக்டோரியன்ஸ் மற்றும் மினிஸ்டர் குரூப் டாக்கா இடையேயான ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது.
அப்போது களத்தில் இருந்த சில வீரர்களில் ஆப்கானிஸ்தான் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் முகமது ஷாஜாத் புகை பிடித்துள்ளார். இதைக்கண்ட மூத்த பேட்ஸ்மேன் தமிம் இக்பால் அவரை டிரஸ்ஸிங் அறைக்குள் செல்லுமாறு கூறியுள்ளார்.
இது குறித்த புகைப்படங்கள் சமூக வளைதங்களில் வைரலாகியது. இதையடுத்து ஷாஜாத்தை பயிற்சியாளர் மிசானூர் ரஹ்மான் எச்சரித்ததாக தகவல்கள் வெளியாகின. மேலும் போட்டியை நடத்தும் அதிகாரிகளும் முகமது ஷாஜாதிற்கு கண்டனம் தெரிவித்தனர்.
இதனிடையே நடத்தை விதியை மீறியதாக ஆப்கானிஸ்தான் நட்சத்திர வீரர் ஷாஜாதிற்கு ஒழுங்கு முறை பதிவில் குறைபாடு புள்ளி வழங்கப்பட்டுள்ளது. மேலும் அவருக்கு தண்டனை வழங்கப்படும் என தெரிகிறது. தமது குற்றத்தை ஷாஜாத் ஒப்புக்கொண்டதாக வங்காளதேச கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
இதையும் படியுங்கள்…ஜூனியர் உலகக்கோப்பையை கைப்பற்றி இந்திய கிரிக்கெட் அணி சாதனை