இண்டிகோ ஒரு தனியார் விமான நிறுவனம் ஆகும். விமான சந்தையில் மிகப்பெரிய பங்கினை கொண்டுள்ள ஒரு நிறுவனமாகும்.
வலுவான செயல்பாட்டின் காரணமாக கடந்த ஆண்டில் நஷ்டத்தில் இருந்த இந்த நிறுவனம், தற்போது லாபத்திற்கு திரும்பியுள்ளது.
இந்த நிலையில் தான் இந்த நிறுவனத்தின் இணை நிறுவனராக இருந்த ராகுல் பாட்டியா, தற்போது அதன் நிர்வாக இயக்குனராக பொறுப்பேற்றுள்ளார்.
பேடிஎம் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி.. ரூ.779 கோடி நஷ்டம்.. அப்படின்னா பங்கு விலை என்னாவது?
புதிய எம்டி?
இத்தொழிற்துறையில் நிலவி வந்த கடினமான சவால்களுக்கும் மத்தியில், இந்த நிறுவனம் லாபம் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக ரோனோஜாய் தத்தா உள்ளார். ராகுல் ஒரு மிகப்பெரிய திறனுள்ள ஒரு மிகப்பெரிய தொழில் முனைவோர் ஆவார்.
இண்டிகோ
இன்று இண்டிகோ என்ற மிகப்பெரிய ராஜாங்கத்திற்கு முக்கிய காரணமானவர் ராகுல் பாட்டியா தான். இண்டிகோ என்ற விமான நிறுவனத்தின் உரிமம் 2004ல் தான் வாங்கப்பட்டது. எனினும் 2006 வரையில் நிறுவனம் செயல்பாட்டுக்கு தயாராகவில்லை. இதில் கவனிக்க தக்க விஷயம் என்னவெனில் கிங்க்பிஷர் ஏர்லைன்ஸ், ஸ்பெஸ்ஜெட் உள்ளிட்ட நிறுவனங்கள் நஷ்டத்தினை கண்டு கொண்டிருந்த காலம் அது. அந்த நெருக்கடியான காலகட்டத்தில் தான் இண்டிகோ புதியதாக சந்தையில் காலடி வைத்தது.
இண்டிகோ வரலாறு
ராகுலும் அவரது தந்தையும் ஒரு விமான சேவையை தொடங்குவது குறித்து திட்டமிட்ட நிலையில், பல விமான நிறுவனங்களும் நஷ்டத்தினை கண்ட காலம் அது. எனினும் விமான சேவை தொடங்க வேண்டும் என்ற உறுதியான திட்டத்திற்கு மத்தியில் 2004ல் உதித்தது தான் இண்டிகோ.
ராகுலின் விருப்பம்
ஆரம்பத்தில் ஆசியராக தனது தொழில் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டவர் தான் ராகுல். அதோடு டிஜிட்டல் தொலைபேசி பரிமாற்றங்களை மேற்கொள்வதற்காக, ஒரு தொலைத் தொடர்பு நிறுவனத்தை அமைக்கும் நோக்கத்தில் இருந்தார். ஆனால் அந்த சமயத்தில் அரசு வெளி நாட்டு தொழில் நுட்பத்தினை ஆதரிக்கவில்லை என்பதால் அதனை செயல்படுத்தவில்லை.
டெல்லி எக்ஸ்பிரஸ்
ராகுலின் தந்தை டெல்லி எக்ஸ்பிரஸ் என்ற விமான நிறுவனத்தினை 9 பேருடன் இணைந்து 1964 முதல் நடத்தி வந்தார். ராகுலின் தந்தையின் உடல் நிலை காரணமாக 1988ல் குடும்பத் தொழிலை கவனிக்க நேர்ந்தது. எனினும் 1991ல் சில சிக்களுக்கும் மத்தியில் ராகுலும், அவரது தந்தையும் நிறுவனத்தில் இருந்து வெளியேறக் கேட்டுக் கொள்ளப்பட்டனர்.
சவால்களுக்கும் மத்தியில் இண்டிகோ
இந்த சமயத்தில் ராகுலுக்கு பெரிதாக தொழிலில் அனுபவம் இல்லை என்றாலும், ஒரு புதிய நிறுவனத்தினை தொடங்க நினைத்தார். தன்னிடம் இருந்த கல்வி அனுபவத்தினை மட்டுமே வைத்துக் கொண்டு, இண்டர் குளோப் நிறுவனத்தினை தொடங்கினார். இது இண்டிகோவாக இல்லை. இண்டர்குளோப் டெக்னாலஜிஸ் ஆக இருந்தது. இதன் பிறகு தான் இண்டிகோவும் உருவானது. இது பற்பல சவால்களுக்கும் மத்தியில் இன்று மிகப்பெரிய நிறுவனமாகவும் உருவெடுத்துள்ளது.
இன்டர் குளோப் ஹோட்டல்
ராகுல் இண்டிகோ மட்டும் அல்ல, இது 2004ம் ஆண்டு முதல் பிரெஞ்சு குழுமமான அக்கார் நிறுவனத்துடன் இணைந்து, ஐபிஐஎஸ் ஹோட்டல்களை இணைக்கும் நிறுவனத்தை நிறுவினார். முதல் மற்றும் இரண்டாம் தர நகரங்கள் அவற்றின் முக்கிய இலக்குகளாகும், இது முக்கிய தொழில் மாவட்டங்கள் அனைத்திலும் பெரும்பாலும் உள்ளது.
இண்டிகோ ஏர்லைன்ஸ்
ராகுலின் மிக பெரிய வெற்றிகரமான தொழிலாகும், இந்த தொழிலில் மிகப்பெரிய இடத்தினை பிடித்துள்ளார். இதே தகவல் தொழில்நுட்ப சேவை மற்றும் பிபிஓ (பிசினஸ் பிராசஸ் அவுட்சோர்சிங்) நிறுவனம், இது பயணம், போக்குவரத்து மற்றும் ஹோட்டல் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்றது. இவற்றைத் தவிர, உணவு விரும்பியான ராகுல் பல உணவகங்களையும் வைத்திருக்கிறார்.
துணை நிறுவனங்கள் பல
இன்டர் குளோப் டெக்னாலஜி கோட்டியண்ட் பிரைவேட் லிமிடெட், இன்டர் குளோப் ஏவியேஷன் லிமிடெட், இன்டர் குளோப் ஏவியேஷன் பிரைவேட் லிமிடெட், அக்வைர் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட், பாரத் டெலிகாம் லிமிடெட், இன்டர் குளோப் பவுண்டேஷன், இன்டர் குளோப் எஜுகேஷன் சர்வீசஸ் லிமிடெட், இன்டர் குளோப் எஸ்டாபிலிஸ்ட்பிரைவேட் லிமிடெட், இன்டர் குளோப் லக்சரி பிராடக்ட்ஸ் பிரைவேட் லிமிடெட், இன்டர் குளோப் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட், ஐ.டி.க்யூ கன்சல்டன்சி பிரைவேட் லிமிடெட், ஸ்ரீ நாத் ஷேர்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் பெகாசஸ் யுடிலிடி மெயிண்டனன்ட் சர்வீஸஸ் பிரைவேட் லிமிடெட் போன்றவை ஆகும்.
எளிமையான மனிதர்
ராகுல் பாட்டியா விமானத் துறையைச் சேர்ந்த மிகச் சில நபர்களில் முக்கியமான ஒருவர். சாதாரண ஆடைகளையும் தொழிலுக்கான சூட்களையும் அணிந்து மிக எளிமையாக இருப்பார். அதோடு அதிக ஈடுபாட்டுடன் இருந்து தன் தொழில்களை வெற்றிகரமாக இன்றும் நடத்தி வரும் நிலையில், தற்போது நிர்வாக தலைவராகவும் பொறுப்பேற்றுள்ளார். இப்படி ஒருவர் தலைவராக இருப்பது இன்னும் நிறுவனத்தினை மேம்படுத்த உதவும்.
who is rahul bhatia? he is now indigo’s MD
who is rahul bhatia? he is now indigo’s MD/யார் இந்த ராகுல் பாட்டியா.. !#indigo #rahulbhatia