மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் சந்தை அபாயத்துக்கு உட்பட்டது. திட்டம் தொடர்பான ஆவணங்களையும், தகவல்களையும் கவனமாக படியுங்கள் என்று செய்தித்தாள்கள், டிவிக்கள் என அனைத்து பார்த்திருப்போம். கேட்டிருப்போம்.
ஆனால் மியூச்சுவல் ஃபண்டுகளில் ரிஸ்க் என்பது இருந்தாலும், மற்ற வங்கி, பங்கு சந்தை முதலீடுகளை காட்டிலும் லாபகரமான திட்டமாகவும் பார்க்கப்படுகின்றது
ஆக நீண்டகால நோக்கில் முதலீடு செய்யும் போது மிக லாபகரமான திட்டமாகவும் பார்க்கப்படுகிறது. இது பங்கு சந்தை திட்டங்களை காட்டிலும் மிக லாபகரமான திட்டமாகவும் பார்க்கப்படுகிறது.
முகேஷ் அம்பானியை ஓரம்கட்டிய கௌதம் அதானி.. டாப் 10ல் கூட அம்பானிக்கு இடமில்லை..!
ஓப்பீடு
எனினும் வங்கி டெபாசிட் திட்டங்களுடன் ஒப்பிடும்போது இதில் சற்று ரிஸ்க் அதிகம் என்றாலும் வருமானம் அதிகம். வங்கி டெபாசிட்டுகளில் வட்டி விகிதம் மிக குறைவு. அதேபோல மற்ற ரியல் எஸ்டேட், அஞ்சலக திட்டங்கள், பங்கு சந்தை இப்படி ஒவ்வொரு திட்டங்களிலுமே ஏதேனும் ஒரு ரிஸ்க் உண்டு. ஆனால் ரிஸ்க் எடுக்காமல் வருமானம் அதிகம் பெற முடியாது. அதற்காக எதனையும் முழுமையாக தெரிந்து கொள்ளாமலும் முதலீடு செய்யவும் கூடாது.
பாசிட்டிவ் விஷயங்கள்
மற்ற பங்கு சந்தை, ரியல் எஸ்டேட், தங்கம், பிக்சட் டெபாசிட் உள்ளிட்ட திட்டங்களில் நீங்கள் அதிகளவு முதலீடுகளை செய்ய வேண்டும். ஆனால் மியூச்சுவல் ஃபண்டுகளில் மிக குறைந்த தொகையினை கூட எஸ் ஐ பி மூலம் முதலீடு செய்யலாம். இதன் மூலம் நீண்டகால நோக்கில் மிகப்பெரிய அளவிலான வருமானத்தையும் ஈட்டலாம்.
ரிஸ்க் வேண்டாம்
எனக்கு ரிஸ்கும் வேண்டாம், வருமானமும் வேண்டாம், கிடைப்பது கிடைக்கட்டும். நான் எந்த ரிஸ்கும் எடுக்க விரும்பவில்லை என நினைப்பவர்கள், வங்கி டெபாசிட்டுகள், அஞ்சலக திட்டங்களில் முதலீடு செய்யலாம், ஆனால் குறிப்பிட்ட காலத்தில் என்னுடைய கார்ப்பஸ் இலக்கு பெரியது என நினைப்பவர்கள் நிச்சயம் ரிஸ்க் எடுத்து தான் ஆக வேண்டும்.
இலக்கு
அதெல்லாம் சரி, நான் ரிஸ்க் எடுக்க தயார், முதலீடு செய்யவும் தயாராக இருக்கிறேன். எதில் முதலீடு செய்யலாம். எப்படி முதலீடு செய்யலாம். என்னுடைய கார்ப்பஸ் இலக்கு 1 கோடி ரூபாய். எனக்கு இதில் வரிச்சலுகை கிடைக்குமா? எது லாபகரமானது? எந்த ஃபண்டுகள் சிறந்தது.
தீர்மானியுங்கள்
முதலில் நீங்கள் முதலீடு செய்ய திட்டமிட வேண்டும். முதலில் உங்களின் தேவை என்ன? அந்த தொகை எப்போது வேண்டும். அதாவது ஷார்ட் டெர்மில் வேண்டுமா? அல்லது நீண்டகால நோக்கில் வேண்டுமா? அதேபோல எந்த துறை சார்ந்த ஃபண்டுகள், எந்த ஃபண்டுகளை தேர்வு செய்யலாம் என்பது உள்ளிட்ட விஷயங்களையும் தீர்மானியுங்கள்.
தேவை என்ன?
எனக்கு வயது 34. நான் தற்போது மாதம் 2,000 ரூபாய் எஸ் ஐ பி-ல் முதலீடு செய்து வருகின்றேன். எனது கார்ப்பஸ் இலக்கு 1 கோடி ரூபாய். இன்னும் நான் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும். எத்தனை ஆண்டுகள் செய்தால் என்னுடைய இலக்கினை அடைய முடியும்.
மாதம் ரூ.2000
மாதம் 2000 ரூபாய் முதலீடு செய்வதன் மூலம், சுமார் 12% லாபம் கிடைக்கிறது என வைத்துக் கொள்வோம். 20 ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால், 20 ஆண்டுகள் கழித்து, 19,98,296 ரூபாய் கிடைக்கும். இதில் முதலீட்டு தொகையாக 480000 ரூபாயும், வருமானமாக 15,18,296 ரூபாயும் கிடைக்கும். ஆக மொத்தம் 20 ஆண்டுகள் கழித்து கிடைக்கும் மொத்த தொகை 19,98,296 ரூபாயாகும்.
ரூ.1 கோடி இலக்கு
மாதம் 11,000 ரூபாய் SIP-யில் முதலீடு செய்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம். 12$ வருமானம் என வைத்துக் கொண்டால், 20 ஆண்டுகள் கழித்து கிடைக்கும் வருமானம் 1,09,90,627 ரூபாயாகும். 20 ஆண்டுகளில் நீங்கள் செய்திருக்கும் முதலீட்டு தோகை 26,40,000 ரூபாயாகும். கிடைக்கும் வருமானம் 83,50,627 ரூபாயாகும். மொத்த முதிர்வு தொகையாக கிடைக்கும் தொகை 1 கோடிக்கும் மேல்.
படிப்படியாக அதிகரிக்கணும்
இத்தோடு நிறுத்திக் கொள்ளலாம். சம்பள விகிதம் அதிகரிக்கும் போதெல்லாம், உங்களின் முதலீட்டினையும் அதிகரிக்க வேண்டும். ஏனெனில் பணவீக்கம் என்பது தொடர்ந்து அதிகரிக்கவே செய்யும் என்பதால், அதற்கேற்ப முதலீட்டினையும் அதிகரிக்க வேண்டும். இதன் மூலம் இன்னும் வருவாய் அதிகமாக கிடைக்கும்.
how to earn Rs.1 crore from mutual funds? how many years want to invest in sip?
how to earn Rs.1 crore from mutual funds? how many years want to invest in sip?/ரூ.1 கோடி இலக்கு.. SIP-ல் எவ்வளவு முதலீடு.. எத்தனை ஆண்டுகள் செய்யணும்..!