பிரபல பாடகியான லதா மங்கேஷ்கருக்கு கடந்த மாதம் முதல் வாரத்தில் கொரோனாதொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து தெற்கு மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு நிமோனியா பாதிப்பு இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு தொடர் சிகிச்சை அளக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தான் அவர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டார், மேலும் அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதால் வெண்டிலேட்டரும் நீக்கப்பட்டதாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.
அதுக்காகதான் வெய்ட்டிங்… நயன் போட்டோவை ஷேர் செய்து ஃபீல் பண்ணிய விக்கி!
இருப்பினும் அவருக்கு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று திடீரென அவரது உடல் நிலை மோசமடைந்துள்ளதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது. அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர் பிரதித் சம்தானி தனது டிவிட்டர் பக்கத்தில் லதா மங்கேஷ்கரின் உடல் நிலை குறித்து பதிவிட்டுள்ளார்.
கொழுக்மொழுக் என மாறிய இறுதிச்சுற்று நடிகை… வைரலாகும் போட்டோஸ்!
அதன்படி, லதா மங்கேஷ்கரின் உடல்நிலை மீண்டும் மோசமடைந்துள்ளது, அவர் கவலைக்கிடமாக உள்ளார். அவ;ர வென்டிலேட்டரில் இருக்கிறார். அவருக்கு இன்னும் ஐசியூவில்தான் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில்
லதா மங்கேஷ்கர்
இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் விரைவில் அவர் நலம் பெற வேண்டும் என பிரார்த்தித்து வருகின்றனர்.
Sila Nerangalil Sila Manithargal – மனசு நெறஞ்சுருக்கு ; ரொம்ப சந்தோசம்!