நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவரான
ராஜ்குந்த்ரா
கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆபாச படங்களை தயாரித்து விற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஆபாச படங்களை தயாரித்து மொபைல் ஆப் மூலம் பதிவேற்றி கோடிக் கணக்கில் அவர் சம்பாதித்ததும் விசாரணையில் தெரிய வந்தது.
இன்னும் அடங்காத தனுஷ்… இருக்குற பிரச்சனை பத்தாதா? கடும் கோபத்தில் ஐஸ்வர்யா!
சில மாதங்கள் சிறை வாசத்தை அனுபவித்த ராஜ்குந்த்ரா பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். ராஜ் குந்த்ரா மீது ஷெர்லின் சோப்ரா உட்பட சில நடிகைகளும் நிர்வாண ஆடிஷன் நடத்தியதாக குற்றம் சாட்டினர். இதனால் ராஜ் குந்த்ரா மீதான க்ரைம் ரேட் எகிறியது.
ராஜ் குந்த்ரா ஆபாச படங்களை தயாரித்துதான் சம்பாதித்தார் என்று தனக்கு தெரியாது என்று கூறிய
ஷில்பா ஷெட்டி
சில மாதங்கள் படப்பிடிப்பு மற்றும் டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் இருந்தார். ராஜ் குந்த்ராவால் குடும்ப மானமே போய்விட்டதாக கூறிய ஷில்பா ஷெட்டி கதறி அழுததாகவும் தகவல் வெளியானது.
ரஜினி செய்த அந்த வேலை… தனுஷ் – ஐஸ்வர்யா பிரிய அதுதான் காரணமா?
இதையடுத்து மகனின் எதிர்கால நலன் கருதி ராஜ் குந்த்ராவை விவாகரத்து செய்யபோவதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் ராஜ் குந்த்ரா, தனது பெயரில் இருந்த 38.5 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை தனது மனைவி பெயருக்கு மாற்றியுள்ளார். மும்மை ஜூஹு கடற்கரை வியூவில் 5 பிளாட்ஸ்களை கொண்ட பில்டிங்கை ஷில்பா ஷெட்டியின் பெயருக்கு மாற்றியுள்ளார்.
இந்த சொத்துப் பதிவு கடந்த 21 ஆம் தேதி நடைபெற்றதாக தெரிகிறது. மேலும் பேஸ்மெண்ட் உட்பட ஷில்பா ஷெட்டியின் பெயருக்கு மாற்றப்பட்டுள்ள இடத்தின் மதிப்பு ஸ்கொயர் ஃபீட் 65000 ரூபாய் என்று கணக்கிடப்பட்டுள்ளது. அடுத்தடுத்து வழக்கு பிரச்சனை என உள்ள நிலையில் ஷில்பா ஷெட்டியின் பாதுகாப்பு மற்றும் அவர் பிரிந்துவிடக் கூடாது என்பதற்காக அவரது பெயருக்கு சொத்து மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Sila Nerangalil Sila Manithargal – மனசு நெறஞ்சுருக்கு ; ரொம்ப சந்தோசம்!