ஆமதாபாத்,
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒருநாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் ஆட்டங்களில் விளையாட உள்ளது.
இரு அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி ஆமதாபாத்தில் நாளை நடக்கிறது. இந்த போட்டி இந்திய அணியின் ஆயிரமாவது போட்டியாக அமைய உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்திய அணியில் ஷிகர் தவான், ருதுராஜ் கெய்க்வாட், ஸ்ரேயாஷ் அய்யர் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் வலை பந்துவீச்சாளர் நவ்தீப் சைனி மற்றும் 3 உதவியாளர்களுக்கும் தொற்று உறுதியானது.
இதனையடுத்து, ஒருநாள் போட்டிகளில் கேப்டன் ரோகித் சர்மாவுடன் இளம் வீரர் இஷான் கிசன் தொடக்கவீரராக களமிறங்குவார் என்று ரோகித் சர்மா கூறியுள்ளார்.
இந்த நிலையில், நாளை விளையாட உள்ள ரோகித் சர்மா தலைமையிலான 16 பேர் கொண்ட இந்திய அணி வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அணியில் புதிதாக இஷான் கிஷன், ஷாரூக்கான் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
வீரர்கள் விவரம் வருமாறு:-
ரோகித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பந்த், தீபக் சாஹர், ஷர்துல் தாக்கூர், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னாய், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, அவேஷ் கான், இஷான் கிஷன், ஷாருக் கான்.
இவர்கள் அனைவரும் இன்று பயிற்சியை தொடங்கி உள்ளனர்.