100 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன்! தாய்- தந்தையின் நெஞ்சை உருக்கும் வார்த்தைகள்


மொராக்கோவில் 100 அடி கிணற்றுக்குள் விழுந்த 5 வயது சிறுவனை காப்பாற்ற மீட்பு குழுவினர் நான்கு நாட்களாக போராடும் நிலையில் சிறுவனின் தந்தை சிறிது நேரம் கூட கண் அசராமல் மகனை நினைத்து தவித்து வருகிறார்.

மொராக்கோவின் Chefchaouenல் உள்ள ஹிக்ரான் கிராமத்தை சேர்ந்த Rayan என்ற 5 வயது சிறுவன் கடந்த 1ஆம் திகதி மாலையில் 100 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்துள்ளான்.

இதையடுத்து 4 நாட்களாக சிறுவனை மீட்க மீட்பு குழுவினர் முயன்று வருகின்றனர்.
தற்போது இறுதிகட்ட முயற்சி நடைபெறுவதையடுத்து சிறுவனை கிட்டத்தட்ட நெருங்கிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிறுவனுக்கு தண்ணீர் மற்றும் ஆக்ஸிஜன் தொடர்ந்து அனுப்பப்பட்டுள்ளது.
இதனையடுத்து அந்நாட்டு மக்கள் அனைவரும் சிறுவன் Rayan உயிருடன் பத்திரமாக மீட்கப்பட வேண்டும் என பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

இந்த செய்தி உலகளவில் பரவியுள்ள நிலையில் பலரும் சிறுவன் மீண்டு வர வேண்டி சமூகவலைதளத்தில் பதிவிடுகின்றனர். Rayan தந்தை கிணற்றை பழுது பார்க்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டிருந்த போது சிறுவன் உள்ளே விழுந்திருக்கிறான்.

சிறுவன் உள்ளே விழுந்ததில் இருந்து அவன் தாயும், தந்தையும் அதிர்ச்சியிலும் மிகுந்த வேதனையிலும் உள்ளனர்.
Rayan தந்தை கூறுகையில், அந்த ஒரு நிமிடம் என் கண்கள் அவனை காணாமல் விட்டதால் அவன் உள்ளே விழுந்துவிட்டான், அவன் ஆழ்துளை கிணற்றில் விழுந்ததில் இருந்து நான் ஒரு நிமிடம் கூட கண் மூடவில்லை என கூறியுள்ளார்.

அவர் மீட்புப் பணியை பதட்டத்துடன் பார்த்துக் கொண்டிருப்பதை காண முடிகிறது.

சிறுவனின் தாயார் அழுது கொண்டே பேசுகையில், ஒட்டுமொத்த குடும்பமும் அவனைத் தேடச் சென்றது. அப்போதுதான் அவன் கிணற்றில் விழுந்துவிட்டான் என்பதை உணர்ந்தோம். அவனை உயிருடன் வெளியே எடுப்போம் என்ற நம்பிக்கையை இன்னும் வைத்துள்ளோம் என கூறியுள்ளார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.