2016ம் ஆண்டு நடைபெற்ற ஒன்பதாவது ஐபிஎல் தொடரின் இறுதி ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும்.சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், மோதின. இந்த போட்டியில் ஹைதராபாத் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த தோல்வி குறித்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தலைவராக இருந்த விராட் கோலி தற்போது நினைவு கூர்ந்துள்ளார்.இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:
அது இன்னும் வலிக்கிறது. அந்த நாளில் நாங்கள் போதுமானதாக விளையாடவில்லை. அது ஒரு விளையாட்டு என்று நான் நினைக்கிறேன், ஆனால் அது வலிக்கிறது.கோப்பையை வெல்ல அணிக்கு வாய்ப்புகள் இருந்தன. ஆனால் நெருக்கடியான தருணத்தில் இரண்டாவது சிறந்த அணியாக இருந்தது.
கேப்டனாக பட்டம் வெல்லாதது என்னை ஏமாற்றமடையச் செய்கிறது. வெற்றி பெறாததற்குக் காரணம் தைரியமாகவோ அல்லது எங்கள் திட்டங்களில் தெளிவாகவோ இல்லை என்ற உண்மையை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
இன்றுவரை, அந்த விளையாட்டு ஒளிபரப்பப்படும்போது கே.எல். ராகுல் ஸ்கிரீன் ஷாட்களை எடுத்து, அது இன்னும் வலிக்கிறது என்று கூறுவார். இவ்வாறு கோலி குறிப்பட்டுள்ளார்.