ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இறுதி ஆட்டத்தில் இன்று இந்திய அணியும், இங்கிலாந்து ஆணியும் ஆடி வருகின்றன.
இந்த ஆட்டத்துக்கான டாஸ் சுண்டப்பட்டதில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் களமிறங்கி பேட்டிங் செய்ய முடிவு செய்து.
அதன்படி தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ஜார்ஜ் தோமஸ் 27 தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அவரை தொடர்ந்து அணியின் மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு அடுத்தடுத்த இந்திய அணியின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.
ஒரு கட்டத்தில் இருபத்தி எட்டு ஓவர்களுக்கு 107 ரன்கள் எடுத்த இங்கிலாந்து அணி, 7 விக்கெட்டுகளை பறிகொடுத்து இருந்தது. அப்போது ஜமிஸ் ரேவ் தனது அதிரடி ஆட்டத்தால் இங்கிலாந்து அணியை மீட்டெடுத்தார்.
அவரின் விக்கெட்டை வீழ்த்தினால் இங்கிலாந்து அணியை குறைந்த ரன்னில் சுருட்டி விடலாம் என்று, பல யூகங்களை வகுத்து இந்திய அணி பந்துவீசியது. ஆனால், இந்திய அணியின் பந்து வீச்சை சமாளித்து, அரைசதத்தை அடித்தார் ஜமிஸ் .
ஜமிஸ் இன்னும் 5 ரன்கள் அடித்தால் தனது செஞ்சுரி பூர்த்தி செய்து விடலாம் என்ற நிலையில், அவசரப்பட்டு ஒரு சிக்ஸர் அடிக்க முயன்றார். அது கேட்சாக மாறி தனது விக்கெட்டை பறிகொடுத்தார். 116 பந்துகளில், 12 பவுண்டரிகள் உட்பட 95 ரன்களை ஜமிஸ் சேர்த்தார்.
தற்போது வரை இங்கிலாந்து அணி 44 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து, 185 ரன்களை சேர்த்துள்ளது.
இந்திய அணியின் பந்துவீச்சை பொறுத்தவரை, அசத்தலாக பந்துவீசிய ராஜ் பாவா மற்றும் ரவிக்குமார் தலா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். தாம்பே ஒரு விக்கெட்டை கைப்பற்றியுள்ளார்.