Dhanush:விட்டுக் கொடுக்காத தனுஷ், ஐஸ்வர்யா: ரசிகர்கள் வாழ்த்து

தனுஷும்,
ஐஸ்வர்யா
ரஜினிகாந்தும் காதலித்து திருமணம் செய்து கொண்டு இரண்டு பிள்ளைகள் பெற்ற பிறகு பிரிந்துவிட்டார்கள். 18 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த தனுஷும், ஐஸ்வர்யாவும் பிரிந்துவிட்டது குடும்பத்தாருக்கு மட்டும் அல்ல ரசிகர்களுக்கும் அதிர்ச்சி அளித்துள்ளது.

2016ம் ஆண்டிலேயே பிரிவதாக முடிவு செய்திருக்கிறார்கள். ஆனால் ரஜினி சமாதானம் பேசி சேர்த்து வைத்தாராம். பல ஆண்டுகளாக அவ்வப்போது மனஸ்தாபம் ஏற்பட்ட போதிலும் எந்த இடத்திலும் மனைவியை விட்டுக் கொடுக்காமல் பேசி வந்திருக்கிறார்
தனுஷ்
.

Dhanush:எல்லாம் உன்னால தான் அப்பா: தேம்பித் தேம்பி அழுத தனுஷ்
பேட்டிகளில் எல்லாம் ஐஸ்வர்யாவை பாராட்டி தான் பேசியிருக்கிறார். மூன்று மாதங்களுக்கு முன்பு தனுஷுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது வழங்கப்பட்டது. அதே விழாவில் ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது கிடைத்தது.

தனுஷையும், ரஜினியையும் சேர்த்து புகைப்படம் எடுத்து பெருமையான மகள், பெருமையான மனைவி என்று இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டிருந்தார் ஐஸ்வர்யா.

பிரியப் போகிறோம் என்று தெரிந்தும் தனுஷை விட்டுக் கொடுக்காமல் பெருமைப்பட்டிருக்கிறார் ஐஸ்வர்யா என்று ரசிகர்கள் தற்போது வாழ்த்துகிறார்கள். மேலும் எந்த இடத்திலும் ஐஸ்வர்யாவை பற்றி தவறாக பேசாத தனுஷையும் ரசிகர்கள் பாராட்டுகிறார்கள். தற்போது தலைப்பை மீண்டும் வாசிக்கவும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.