பிளாக்ஷிப் தரத்தில், குறைவான விலையில் ஸ்மார்ட்போன்களை விற்பனைக்கு கொண்டு வருவதில் ஐக்யூ நிறுவனம் ஸ்பெஷல் என்றே சொல்லலாம். தற்போது சீனாவில் ஜனவரி மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட
ஐக்யூ 9 சீரிஸ்
தொகுப்பு ஸ்மார்ட்போன்களை நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வர முடிவெடுத்துள்ளது.
இது தொடர்பாக ஆன்லைன் ஷாப்பிங் தளமான அமேசானில் நிறுவனம் டீஸர் வெளியிட்டுள்ளது. இந்த ஐக்யூ 9 சீரிஸ் தொகுப்பில், ஐக்யூ 9, ஐக்யூ 9 ப்ரோ, ஐக்யூ 9 எஸ்இ ஆகிய மூன்று மாடல் ஸ்மார்ட்போன்கள் உள்ளது. அனைத்தும் திறன் கொண்ட சிப்செட், நல்ல கேமரா, புதிய வகை தொழில்நுட்ப கருவிகளை கொண்டு விற்பனைக்கு வரவுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் தொகுப்பில் 120W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொடுக்கப்பட்டுள்ளது கூடுதல் சிறப்பாகப் பார்க்கப்படுகிறது. மேலும், இதன் மேம்பட்ட வேரியண்டில் கிம்பல் கேமரா (Gimbal Camera) கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு சில ஸ்மார்ட்போன்களே இந்த அம்சத்துடன் விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
oppo reno 7 pro: உலகின் முதல் RGBW செல்பி கேமரா… அப்படி என்ன ஸ்பெஷல் கேமரா இது?
எனவே, புகைப்பட பிரியர்களுக்கு இந்த மொபைல் பெஸ்ட் சாய்ஸ் ஆக இருக்கும். கேமர்களுக்கு வசதியாக இந்த ஸ்மார்ட்போன்கள் மேம்பட்ட குளிர்விக்கும் தொழில்நுட்பத்துடன் வருகிறது. ஸ்மார்ட்போன் சூடாகாமல் இந்த தொழில்நுட்பம் பாதுகாக்கிறது.
ஐக்யூ 9 சிறப்பம்சங்கள் (iqoo 9 specs)
ஐக்யூ 9 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்துடன் வருகிறது. இதில் 6.56″ அங்குல அமோலெட் டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது. இதில் 120Hz ரெப்ரெஷ் ரேட் அம்சம் உள்ளது. செயல்திறனுக்காக ஸ்னாப்டிராகன் 888+ சிப்செட் இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. இது 5ஜி ஆதரவைப் பெறுகிறது.
இன்பினிக்ஸ் முதல் 5ஜி ஸ்மார்ட்போன் Infinix Zero 5G விரைவில் அறிமுகம்!
கூடவே, LPDDR5 ரேம், புதிய UFS 3.1 மெமரி ஆகிய லேட்டஸ்ட் அம்சங்கள் இடம்பெற்றுள்ளது. பின்புறம் மூன்று கேமராக்கள் கொண்ட அமைப்பு இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. அதில் முதன்மை கேமரா 48 மெகாபிக்சல் லென்ஸ் உடன் வரும் என்று தெரிகிறது. 4,350mAh பேட்டரி இந்த ஸ்மார்ட்போனுடன் வருகிறது.
ஐக்யூ 9 ப்ரோ சிறப்பம்சங்கள் (iqoo 9 pro specs)
ஐக்யூ 9 ப்ரோ ஸ்மார்ட்போனானது 6.78″ அங்குல அமோலெட், 120Hz ஆதரவு கொண்ட டிஸ்ப்ளே உடன் வெளிவருகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 12ஜிபி ரேம், 256ஜிபி மெமரி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஸ்னார்டிராகன் 8 ஜென் 1 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இது 5ஜி ஆதரவைப் பெறுகிறது.
இந்த ஸ்மார்ட்போனிலும் பின்புறம் மூன்று கேமராக்கள் கொண்ட அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அதில், 50 மெகாபிக்சல் முதன்மை சென்சார் கிம்பல் ஆதரவுடன் வருகிறது. அசைவில்லாத வீடியோக்களை சினிமா தரத்தில் எடுக்க இந்த கேமரா உதவும் என்று நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
Vivo Y75 5G: 50MP கேமரா… டைமன்சிட்டி 700 சிப்செட்… Android 12 அடிப்படையிலான 5ஜி போன்!
மேலும், 120W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வரும் இந்த ஸ்மார்ட்போனில், 4,700mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. 50W வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவும் இதில் உள்ளது. கூடுதலாக 10W ரிவர்ஸ் சார்ஜிங் ஆப்ஷனும் உள்ளது.
ஐக்யூ 9 எஸ்இ (iqoo 9 se specs)
ஐக்யூ 9 எஸ்இ ஸ்மார்ட்போன் குறித்து தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. எனினும் iQoo 9 SE ஸ்மார்ட்போன் அமோலெட் டிஸ்ப்ளே உடன் வரும் என்று தெரிகிறது. இதில் 90Hz ரெப்ரெஷ் ரேட் கொடுக்கப்படலாம். மேலும், பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும், மேலும், 6ஜிபி ரேம், 128ஜிபி மெமரி அம்சங்களை இந்த ஸ்மார்ட்போன் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 5ஜி ஆதரவைப் பெறுகிறது.
ப்ரீபெய்ட் பயனர்களுக்கு இனிப்பான செய்தி… 28 நாள்கள் வேலிடிட்டிக்கு பதிலாக இனி 30 நாள்கள்… டிராய் அதிரடி
கிடைக்கப்பெற்ற தகவல்களின் படி, இந்த அம்சங்களுடன் ஐக்யூ 9 சீரிஸ் ஸ்மார்ட்போன் தொகுப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், இந்த தொகுப்பு ஸ்மார்ட்போன் வெளியாகும் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.