புதுடெல்லி: மரணம் என்றாலே அனைவருக்கும் அச்சம் இருக்கும் என்பது எவ்வளவு உண்மையோ, அதே அளவு உண்மை நீண்ட நாட்கள் வாழ வேண்டும் என்ற ஆசை இருப்பதும் என்பது அனைவருக்கும் தெரிந்த சிதம்பர ரகசியம் தான்.
இன்று வாழ்க்கை முறைக் கோளாறுகள், உணவு முறை மாற்றங்கள், கலப்படம், மாசுபாடு என பல நோய்களால் மக்களின் வாழ்நாள் குறைந்துக் கொண்டே வருகிறது.
இளைஞர்களும் அகால மரணம் அல்லது கடுமையான நோய்களுக்கு பலியாகின்றனர்.இப்படி வாழுவதற்குக் அதிக பிரச்சனைகள் இருந்தாலும், உலகில் அதிகபட்ச ஆயுள் கொண்ட மனிதர்கள் வாழும் சில நாடுகள் உள்ளன.
ALSO READ | பூமியின் விலை என்ன? கண்டறிய சிறப்பு forumula!
நூறாண்டு வாழும் மனிதர்கள் அதிகமாக இருக்கும் நாடுகள் என்ற பெருமை சில நாடுகளுக்கு மட்டுமே உண்டு.
100 ஆண்டுகள் ஆயுள் கொண்ட மனிதர்கள் வாழும் நாடுகள் எவை என்று தெரிந்துக் கொள்வதில் என்ன சுவராசியம் இருக்கப்போகிறது? அவர்களின் நீண்ட ஆயுளின் ரகசியம் என்னவென்று தெரிந்து கொள்வோம்.
மொனாக்கோ
மொனாக்கோ (Monaco) அடர்த்தியான மக்கள்தொகை கொண்ட நாடு, உலகின் இரண்டாவது சிறிய நாடு, ஆனால் அதன் மக்கள் அதிகம் வாழ்கின்றனர். இங்கு வாழும் மக்களின் நீண்ட ஆயுளுக்கு பல காரணிகள் காரணமாகின்றன.
ஆரோக்கியமான உணவு மற்றும் சிறந்த சுகாதார அமைப்பு ஆகியவை இதில் அடங்கும். இங்கு வாழ்க்கை மன அழுத்தம் குறைவாக உள்ளது.
ALSO READ | அமெரிக்க எம்பயர் ஸ்டேட் கட்டிடமும்… ஒற்றை நாணயமும்
ஜப்பான்
ஜப்பான் (Japan) நாட்டு மக்களும் மிக நீண்ட காலம் வாழ்கிறார்கள். WHO பதிவுகளின்படி, பெரும்பாலான ஜப்பானியர்கள் தங்கள் 75 வயது வரை பூரண ஆரோக்கியத்துடன் இருக்கிறார்கள்.
அவர்களுக்கு பெரிய அளவில் நோய்கள் பாதிப்பது இல்லை. இங்குள்ள வயதானவர்கள்கூட நோய்களால் மரணிப்பதும் மிகக் குறைவே…
ஹாங்காங்
இந்தப் பட்டியலில் ஹாங்காங்கும் (Hong Kong) இடம்பெற்றுள்ளது. உலகெங்கிலும் உள்ள மற்ற நாடுகளில் வாழும் பெண்களை விட இங்குள்ள பெண்கள் நீண்ட காலம் வாழ்கின்றனர்.
இங்கு பெண்கள் நீண்ட காலம் வாழ்வதற்கு காரணம், இரவும் பகலும் கடுமையாக உழைத்துதான் என நிபுணர்கள் சொல்வது ஆரோக்கியத்தின் சிதம்பர ரகசியமாக இருக்கலாம்.
சிங்கப்பூர்
கடந்த மூன்று தசாப்தங்களில் சிங்கப்பூர் (Singapore) மக்களின் வாழ்நாளில் 10 ஆண்டுகள் அதிகரித்துள்ளது என்று அறிக்கைகள் கூறுகின்றன. கூடுதலாக, நாள்பட்ட நோயை முன்கூட்டியே கண்டறிதல் மற்றும் தடுப்பது என்பது, நீண்ட ஆயுட்காலம் அதிகரிப்பதில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
சுவிட்சர்லாந்து
சுவிட்சர்லாந்திலும் மக்களின் ஆயுள் அதிகமாக இருக்கிறது. இந்த நாட்டு மக்கள் அதிக மகிழ்வுடன் வாழ்பவர்கள். அதுவே மன அழுத்தத்தைப் போக்கி, நீண்ட ஆயுளுடன் வாழ்வதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. மேலும், இங்கு மாசு இல்லாததால் நோய்களும் குறைவாகத் தான் இருக்கிறதாம்!
ஐஸ்லாந்து
ஐக்கிய நாடுகளின் தகவல்களின்படி, ஐஸ்லாந்து (Iceland) ஆயுட்காலம் பட்டியலில் ஆறாவது இடத்தில் உள்ளது. பொதுவாக இங்கு வசிப்பவர்கள் நோய்வாய்ப்படுவது குறைவு.
இதய நோய் மற்றும் மனச்சோர்வு வழக்குகள் அரிதாகவே காணப்படுகின்றன. சிறந்த உணவு முறையால், இங்குள்ள மக்கள் நிறைவான வாழ்க்கையை நடத்துகின்றனர்.
ALSO READ | மூன்றாம் உலகப் போர் அச்சம்! பாதுகாப்பு சுரங்கங்கள் ரெடி