ஒப்போ நிறுவனம் பிப்ரவரி 4ஆம் தேதி தனது ரெனோ 7, ரெனோ 7 ப்ரோ ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இதனுடன் தனது புதிய
ஒப்போ வாட்ச் பிரீ
ஸ்மார்ட்வாட்சையும் அறிமுகப்படுத்தியது. இந்த தகவல் சாதனங்கள் முன்னதாகவே சீன சந்தையில் வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது வெளியான ஒப்போ வாட்ச் பிரீ ஸ்மார்ட்வாட்ச் (Oppo Watch Free) அமோலெட் (AMOLED) தொடுதிரையுடன் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்ச் திரையின் அளவு 1.64″ அங்குலமாக உள்ளது. இது 280 x 456 பிக்சல் ரெசலியூஷனைக் கொண்டது. 16.7 மில்லியல் பிக்சல் நிற ஆதரவும் இதில் உள்ளது. 2.5டி கிளாஸ் பாதுகாப்பும் இந்த திரைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
ஒப்போ வாட்ச் பிரீ ஸ்மார்ட்வாட்ச் அம்சங்கள் (Oppo Watch Free Specs)
ஸ்மார்ட்வாட்சில் ப்ளூடூத் 5.0 இணைப்பு ஆதரவு உள்ளது. 6-ஆக்சிஸ் அக்செலரேஷன், கைரோஸ்கோப் சென்சார், ஆப்டிகல் இதய துடிப்பு சென்சார், ஆப்டிகல் ரத்த ஆக்ஸிஜன் சென்சார், சுற்றுப்புற ஒளி சென்சார் ஆகியன கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ளது. ஒப்போ வாட்ச் பிரீ ஸ்மார்ட்வாட்ச் இரு வண்ணத் தேர்வுகளில் அறிமுகம் ஆகியுள்ளது. வென்னிலா, கருப்பு ஆகிய நிறங்களில் இது கிடைக்கிறது.
தோற்றத்தில் ஹானர் நிறுவனத்தின் ஸ்மார்ட்பேண்ட் போலவே ஒப்போ வாட்ச் பிரீ ஸ்மார்ட்வாட்சின் வடிவமைப்பு உள்ளது. இதில் நடப்பது, ஓடுவது, சைக்ளிங், ஸ்கிப்பிங், இறகுபந்து, கூடைபந்து, கால்பந்து, ஜாக்கிங், ஹைக்கிங், டென்னிஸ், ரக்பி, கோல்ஃப், யோகா, உடற்பயிற்சி, பேஸ்பால் போன்றவைகளை தொடர்ந்து கண்காணிக்கும் அம்சங்கள் உள்ளது.
Noise ColorFit Icon Buzz: காலிங் வசதியுடன் ரூ.2999க்கு நாய்ஸ் ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்!
ஒப்போ வாட்ச் பிரீ ஸ்மார்ட்வாட்ச் விலை (Oppo watch free price in india)
Oppo Watch Free ஸ்மார்ட்வாட்சின் ஸ்டிராப், சிலிக்கானால் உருவாக்கப்பட்டது. மிகவும் நேர்த்தியாக இது தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த வாட்சின் மொத்த எடை 32.6 கிராமாக உள்ளது. வாட்ச் ஸ்டிராப் இல்லாமல் இதன் எடை 20.9 கிராமாக உள்ளது. இந்த வடிமைப்பில் சில வாட்சுகளே சந்தையில் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. எனவே, இந்த டிசைனை விரும்பும் மக்களிடம், பெரும் போட்டி இல்லாமல் இந்த ஸ்மார்ட்வாட்ச் சென்றடையும் என்று நம்பலாம்.
இந்த ஸ்மார்ட்வாட்ச் 5 ஏடிஎம் நீர் பாதுகாப்பு அம்சத்துடன் வருகிறது. ஒப்போ வாட்ச் பிரீ ஸ்மார்ட்வாட்சானது 230mAh பேட்டரி திறன் கொண்டு செயல்படுகிறது. இதனை ஊக்குவிக்க 5V திறன் கொண்ட மேக்னெட்டிக் சார்ஜர் கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு முறை சார்ஜ் செய்தால், 14 நாள்கள் வரை இந்த ஸ்மார்ட்வாட்சை பயன்படுத்தலாம். மெசேஜ், அழைப்புகளுக்கான நோட்டிபிகேஷனும் போன்ற அம்சங்களும் உள்ளது. இந்தியாவில் 5,999 ரூபாய்க்கு இந்த ஸ்மார்ட்வாட்ச் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
டிசோ வாட்ச் ஆர்: அமோலெட் திரையுடன் வரும் கியூட்டான ஸ்மார்ட்வாட்ச்