Tamil Nadu News Updates: ஜம்மு காஷ்மீர் ஸ்ரீநகர் அருகே சகுரா பகுதியில் நடந்த தாக்குதலில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். காவல் துறையால் சுட்டுக்கொல்லப்பட்ட 2 பயங்கரவாதிகளும் லஷ்கர் இ தொய்பா அமைப்புடன் தொடர்புடையவர்கள் என ஜம்மு போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் மனுத் தாக்கல் நிறைவு
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், தமிழ்நாடு முழுவதும் 50 ஆயிரத்துக்கு அதிகமானோர் மனு தாக்கல் செய்துள்ளனர். மாநகராட்சிக்கு 6,818 பேரும், நகராட்சிக்கு 12,171 பேரும், பேரூராட்சிக்கு 20,847 பேரும் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் 200 வார்டுகளுக்கு 3,456 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு
சென்னை ஐஐடி சாதி பிரச்சினை – முதல்வருக்கு கடிதம்
சென்னை ஐஐடியில் நிலவும் சாதி குறைபாடு குறித்து விசாரிப்பதற்காக குழு அமைக்க கோரி பிரதமர் , மத்திய கல்வி அமைச்சருக்கு உதவி பேராசிரியர் விபின் கடிதம் எழுதியுள்ளார்.
குளிர்கால ஒலிம்பிக்ஸ் தொடக்கம்
சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் குளிர்கால ஒலிம்பிக்ஸ் கோலாகலமாக தொடங்கியுள்ளது. கண்கவர் வாண வேடிக்கைகள், கலை நிகழ்ச்சியுடன் தொடக்க விழா நடைபெற்றது.
பெட்ரோல், டீசல் அப்டேட்
93நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. பெட்ரோல் லிட்டர் 101.40 ரூபாய்க்கும், டீசல் 91.43 லிட்டர் ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
நீட் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் தலைமையில் நடைபெறும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் அதிமுக பங்கேற்காது என கட்சி தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.முன்னதாக, அனைத்து கட்சிக் கூட்டத்தை புறக்கணிப்பதாக பாஜக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு பெற அடுத்த செய்ய வேண்டியது குறித்து விவாதிக்க தலைமை செயலகத்தில் இன்று சட்டப்பேரவை அனைத்து கட்சிக் கூட்டம் நடைபெறுகிறது. பாஜக கூட்டத்தில் பங்கேற்கவில்லை என அறிவித்துள்ளது.