நடைபெற இருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சியும் தனித்துப் போட்டியிடுவதாக அறிந்திருந்த நிலையில், அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் சென்னையில் பரப்புரை மேற்கொண்டார்.
சென்னையில் நடைபெற்ற கூட்டத்தில் கமல்ஹாசன் பேசினார். அப்போது பேசிய அவர், “நாம் தலைவர்களைத் தேடக்கூடாது. நல்ல சமூக சேவகர்களைத் தேடவேண்டும். ஆளுநர், மத்திய அரசின் பேச்சைக் கேட்டுச் செயல்படுகிறார். ஆளுநர் ஒரு ஏஜென்ட் போல் செயல்படக் கூடாது. கிழக்கு இந்திய கம்பெனியை அனுப்பிவிட்டு, வடக்கு இந்திய கம்பெனி ஆளுவதற்கா குடியரசு பெற்றோம்?
Also Read: ஆளுநர் Vs முதல்வர்: தமிழகத்தில் தடம்பதிக்க முயல்கிறதா பாஜக?!
`எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள்’ என்று எங்களுக்குக் கொடுத்த சத்தியத்தை மீறுவதற்கான எல்லா முயற்சியும் நடந்து கொண்டு இருக்கிறது. அதை எதிர்ப்போம் என்பது தான் எங்களுடைய நிலைப்பாடு. ஆளுநருக்கு மரியாதை கொடுக்க நாங்கள் தவறியதில்லை. ஆளுநர் ஏஜென்டாக தனது கடமையைச் செய்கிறார்.
மக்கள் நீதி மய்யத்தின் பலம் எங்கே இருக்கிறது என்று எங்களுக்குத் தெரியும். அந்த இடத்தில் நாங்கள் போட்டியிடுகின்றோம். மக்களின் குரல் மத்தியில் ஒலிக்க வேண்டும்” என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
Also Read: நெல்லை: `தி.மு.க-வுடன் மக்கள் நீதி மய்யம் கூட்டணியா?!’ – கமல்ஹாசன் சொல்வதென்ன?