ராஜஸ்தானின் அஜ்மீரில் உள்ள தர்க்காவுக்குப் பிரதமர் நரேந்திர மோடி சார்பில் சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி மலர்ப் போர்வையை வழங்கினார்.
அஜ்மீரில் தர்க்காவில் உள்ள காஜா மொய்னுத்தீன் சிஷ்டி 810ஆவது உருசு விழா பிப்ரவரி ஒன்பதாம் நாள் நடைபெற உள்ளது. இதையொட்டித் தர்க்காவுக்குப் பிரதமர் மோடி சார்பில் மலர்ப்போர்வை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அதை மத்தியச் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி, தர்க்கா நிர்வாகத்திடம் இன்று முறைப்படி வழங்கினார்.