அட போங்கப்பா.. இதே வேலையா போச்சு: மீண்டும் தள்ளி வைக்கப்பட்ட போனி கபூர் பட அப்டேட்..!

அருண்ராஜா காமராஜ்
நடிகர், பாடலாசிரியர் மற்றும் பாடகர் என பன்முகம் கொண்டவர். இவர் கனா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அவரின் நண்பரான நடிகர் சிவகார்த்திகேயன் இந்தப்படத்தை தயாரித்திருந்தார். ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ் நடிப்பில் வெளியான இந்த படம் பெண்கள் கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து உருவாகி இருந்தது.

வசூல் மற்றும் விமர்சனரீதியாக நல்ல வரவேற்பை பெற இந்தப்படத்தை தொடர்ந்து அருண்ராஜா காமராஜின் இரண்டாவது படம் குறித்த எதிர்பார்ப்பில் இருந்தனர் ரசிகர்கள். அதன்படி, ஹிந்தியில் ஹிட்டடித்த ‘ஆர்டிகள் 15’ படத்தை தமிழில் ரீமேக் செய்து வருகிறார்.
உதயநிதி ஸ்டாலின்
நடிக்கும் இந்த படத்தை ஜீ5 ஸ்டுடியோஸ் சார்பில்
போனி கபூர்
தயாரித்துள்ளார்.

அண்மையில் இந்தப்படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் படத்தின் ‘
நெஞ்சுக்கு நீதி
‘ டைட்டில் வெளியாகி வைரலானது. கலைஞரின் பிரபலமான நூலின் பெயரை படத்தின் தலைப்பாக்கியுள்ளது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பினை கிளப்பியுள்ளது. இந்நிலையில் ‘நெஞ்சுக்கு நீதி’ ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக் குரலாய் நிச்சயம் ஒலிக்கும் என தனது ட்விட்டர் பக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

Simbu: ஒரு வெற்றி படத்துக்கே இந்த நிலைமையா..? ‘மாநாடு’ தயாரிப்பாளர் வேதனை..!

இந்நிலையில் இன்று வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்ட’நெஞ்சுக்கு நீதி’ படத்தின் டீசர் பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கர் மறைவால் ஒத்தி வைக்கப்படுவதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். ஏற்கனவே போனி கபூர் தயாரித்த ‘வலிமை’ படத்தின் அப்டேட்கள் கொரோனா உள்ளிட்ட காரணங்களால் தொடர்ந்து தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது மீண்டும் போனி கபூர் படத்தின் அப்டேட் தள்ளி வைக்கப்பட்டுள்ளதை இணையத்தில் ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

‘நெஞ்சுக்கு நீதி’ படத்தில்
தான்யா ரவிச்சந்திரன்
, ஷிவானி ராஜசேகர், ஆரி, சிவாங்கி உள்ளிட்ட பலர் உதயநிதி ஸ்டாலினுடன் நடித்து வருகிறார்கள். இந்தப்படத்தை தொடர்ந்து மு.மாறன் இயக்கத்தில் ‘கண்ணை நம்பாதே’ என்ற த்ரில்லர் படத்திலும் கே.எஸ்.அதியமான் இயக்கத்தில் ஹாரர் படமான ‘ஏஞ்சல்’ படத்திலும் உதயநிதி நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் தலைதூக்கும் உதயநிதி..! எந்த எந்த படங்கள் தெரியுமா?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.