வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி-தனியார் மருத்துவக் கல்லுாரி, பல்கலைக்கழகங்களில் உள்ள, 50 சதவீத ‘சீட்’களுக்கு, அரசு மருத்துவக் கல்லுாரிகளில் நிர்ணயிக்கப்படும் கட்டணத்தை மட்டுமே வசூலிக்க, மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.
நாடு முழுதும் உள்ள தனியார் மருத்துவக் கல்லுாரிகள், பல்கலைக் கழகங்களில் கல்வி கட்டணம் வசூலிப்பது தொடர்பாக, தேசிய மருத்துவ கமிஷன் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:தனியார் மருத்துவக் கல்லுாரிகள் மற்றும்பல்கலைகளுக்கான கல்வி கட்டணம் நிர்ணயிக்க, தொடர்ச்சி 4ம் பக்கம்நிபுணர் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு பல தரப்பினருடன் ஆலோசனை நடத்தி, 26 முக்கிய பரிந்துரைகளை அளித்துள்ளது.
இவற்றை, தேசிய மருத்துவ கமிஷனின் இணையதளத்தில் பார்க்கலாம்.அதில் முக்கியமாக, தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் பல்கலைகளில், அவற்றில் உள்ள மொத்த சீட்களில், 50 சதவீத, சீட்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரிக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணத்தையே வசூலிக்க வேண்டும். இதை அந்தந்த மாநிலம் அல்லது யூனியன் பிரதேசத்தில் உள்ள அரசு கல்லூரிகளுக்கு ஏற்ப செயல்படுத்த வேண்டும்.
இந்த, 50 சதவீத சீட்களில், அரசு ஒதுக்கீட்டை பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். ஒருவேளை, அரசு ஒதுக்கீடு பெற்றவர்கள் எண்ணிக்கை, கல்லூரியின் மொத்த சீட்களின், 50 சதவீதத்துக்கும் குறைவாக இருந்தால், மீதமுள்ள இடங்களுக்கு தகுதி அடிப்படையில் இந்த சலுகையை வழங்கலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Advertisement